herzindagi
image

வெள்ளி கொலுசுக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பெண்கள் வெள்ளி கொலுசுகளை அணியும் போது அவர்களின் உடல் குளிர்ச்சியாக இருக்கக்கூடும்
Editorial
Updated:- 2025-10-24, 23:51 IST

இந்திய கலாசாரத்தில் பிறந்த குழந்தைகள் தொடங்கி ஓர் வயது வரை கொலுசு அணியும் பழக்கத்தை மக்கள் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வந்துள்ளனர். வெள்ளி கொலுசுகள் அணிவது அவர்களை அழகாகக் காட்டுவதற்கு மட்டுமல்ல உடல் ரீதியாகவும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதோ அவற்றில் சில உங்களுக்காக.

மேலும் படிக்க: பெண்கள் வயதுக்கு ஏற்ப தங்களை தங்காளே பராமரித்து கொள்ள செய்ய வேண்டியவை

வெள்ளி கொலுகள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • இன்றைய காலத்தில் சில பெண்கள் வெள்ளி கொலுசிற்கு மாற்றாக தங்க கொலுகள் அணிவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். தங்கம் வாங்குவது ஓர் சேமிப்பாக இருந்தாலும் காலிற்கு கொலுசு அணிவது உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்கிறது.
  • பெண்களுக்கு உடலின் வெப்பநிலையானது எப்போதும் சீராக இருக்காது. இதனால் வயிற்று வலி போன்ற பல உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், வெள்ளி கொலுசுகள் சிறந்த தேர்வாக அமையும். ஆம் வெள்ளியானது உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.

மேலும் படிக்க: கருவுறுதலுக்கு முக்கிய பங்குவகிக்கும் ஹார்மோன் பெண்களின் வயதுக்கு ஏற்ப குறையுமா?

  • உடலின் வெப்பநிலை சீராக இருந்தாலே எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.

  • கணுக்காலை உரசும் அளவிற்கு அணியும் வெள்ளி கொலுசுகள் தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துகிறது.
  • நாள் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றும் குடும்ப பெண்கள் முதல் பணிக்குச் செல்லும் பெண்கள் வரை பலரும் கால் வலியால் அவதிப்படுவார்கள். இவற்றைச் சரி செய்ய வெள்ளி கொலுகள் அணியலாம். வெள்ளியில் உள்ள ஆற்றல் கால் வலியைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
  • வெள்ளிக்கு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் எவ்வித உடல் நல பாதிப்பையும் ஏற்பட வாய்ப்பில்லை.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]