
மன அழுத்தம் என்பது எப்போதும் அழுகை அல்லது வெளிப்படையான சோகமாக இருப்பதில்லை. பல நேரங்களில், அது புன்னகைகள் மற்றும் சமூக தொடர்புகளுக்கு பின்னால் மறைந்திருக்கும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மற்றவர்களுக்கு உதவவும் அதன் நுட்பமான அறிகுறிகளை நாம் கண்டுகொள்வது அவசியம்.
மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்
இன்றைய வேகமான உலகில், மன ஆரோக்கியம் குறித்த தகவல்கள் பரவலாக கிடைத்தாலும், மன அழுத்தத்தின் மறைமுகமான அறிகுறிகளை பலரும் கண்டுகொள்வதில்லை. இதன் நிலைமை மோசமடைவதற்கு முன், இந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது மிகவும் முக்கியம்.
திடீரென நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்வதில் ஆர்வம் இல்லாமல் போவது. எந்த காரணமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பது அல்லது தனியாக இருக்க விரும்புவது.
போதுமான தூக்கம், சரிவிகித உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இருந்தும், தொடர்ந்து சோர்வாகவும், குறைந்த ஆற்றலுடனும் உணர்வது இதன் மற்றொரு அறிகுறியாகும்.
எந்தவித உடல்நல குறைவும் அல்லது வெளிப்படையான காரணமும் இல்லாத போதும், தொடர்ந்து சோகமாக, வெறுமையாக அல்லது மனதளவில் கனமாக உணர்வது.

மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அதிகமாக சாப்பிடுவது அல்லது பசியே இல்லாமல் இருப்பது ஒரு அறிகுறியாகும். இந்த மாற்றங்கள் உணர்ச்சிகளை சமாளிக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம்.
மேலும் படிக்க: செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
முன்பு ரசித்து செய்த விஷயங்களில் திடீரென ஆர்வம் குறைந்து, எந்த செயலிலும் உற்சாகம் இல்லாமல் இருப்பது.
வழக்கமாக மகிழ்ச்சியை தரும் நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியாக உணர முடியாமல் போவது. வாழ்க்கை சலிப்பாக அல்லது அர்த்தமற்றதாக தோன்றுவது ஆகியவை ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவ காரணங்கள் இல்லாத போதும், அடிக்கடி தலைவலி, முதுகுவலி அல்லது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவது.

உள்ளுக்குள் சோர்வாக, நம்பிக்கையற்று அல்லது தனித்து உணர்ந்தாலும், வெளியில் மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் இருப்பது போல் வலுக்கட்டாயமாக நடந்துகொள்வது.
நீண்ட நேரம் தனிமையில், ஒரு அறையிலேயே இருக்க வேண்டும் என்ற தீவிர விருப்பம் இருக்கும். மற்றவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் கொள்ளாமல் இருப்பதை உணர்வார்கள்.
தூங்குவதில் சிரமம், ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருத்தல் அல்லது அதிக நேரம் தூங்கியும் சோர்வுடனே இருப்பது போன்றவை பலரிடம் காணப்படும்.
மன ஆரோக்கியம் என்பது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் அடித்தளமாகும். உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், மனநிலை நன்றாக இருந்தால், அதிலிருந்து மீண்டு வர முடியும். ஆனால், உடல்நிலை சரியாக இருந்தும், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால், அது உங்கள் அன்றாட வாழ்க்கை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்த அறிகுறிகளை நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ அனுபவித்தால், உடனடியாக மனநல ஆலோசகரை அணுகுவது மிகவும் முக்கியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]