herzindagi
vitamin b health

Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 பாதிப்பின் அறிகுறிகள் இது தான்!

மனிதர்களுக்கு நாள் ஒன்றுக்கு நமக்கு 2.4 மைக்ரோகிராம் அளவிற்கு வைட்டமின் பி12  தேவைப்படுகிறது
Editorial
Updated:- 2024-01-19, 08:03 IST

உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது வைட்டமின் பி 12. உடலில் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், நரம்பியல் மற்றும்  டிஎன்ஏ செயல்பாடுகள் போன்றவை முறையாக இயங்க வேண்டும் நமக்கு வைட்டமின் பி 12 அவசியம். குறிப்பாக நாள் ஒன்றுக்கு நமக்கு 2.4 மைக்ரோகிராம் அளவிற்கு வைட்டமின் பி12  தேவைப்படுகிறது. இதன் அளவு குறையும் போது தான், உடலில் பல்வேறு மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும். இதோடு மட்டுமின்றி வைட்டமின் பி 12 ன் குறைபாடு இரத்த சிவப்பணு அணுக்களின் உற்பத்தியைக் குறைய செய்வதோடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.  நமது உடலில் வைட்டமின் பி 12 குறைகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும். இதோ என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

b vitamin

வைட்டமின் பி12 ன் அறிகுறிகள்:  

  • நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றல் வைட்டமின் பி 12 மூலம் கிடைக்கும் என்பதால் இதில் குறைபாடு ஏற்படும் போது உடல் சோர்வு ஏற்படும். எந்த வேலையையும் முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும்.
  • வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் போது, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையக்கூடும். இதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கு சிரமம் ஏற்படுவதால் மூச்சு விடுதலில் சிரமம்  ஏற்படும்.
  • பல நேரங்களில் காரணமே இன்றி தலைவலியை நாம் அனுபவிப்போம். வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும்.  இதனால் நமக்கு அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஏற்படக்கூடும்
  • வைட்டமின் பி 12 பாதிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள். 
  • கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படுதல், நினைவாற்றல் இழப்பு, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற அறிகுறிகளும் வைட்டமின் பி 12 பாதிப்பின் ஆரம்பமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • வைட்டமின் பி 12 குறைபாடு இதய பாதிப்பை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவைப் பாதிப்பால் இதய பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது.
  • கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகளும் வைட்டமின் பி 12 பாதிப்புகளால் ஏற்படுகிறது. 

பாதிப்பைத் தடுப்பது எப்படி?

vitmin b  foods

வைட்டமின் பி12 பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்றால் உணவு முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.  பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் ஊட்டச்சத்துள்ள காய்கறிகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேற்கூறியுள்ள அறிகுறிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]