பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. பூண்டில் ஆன்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கொலஸ்ட்ராலை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளை கொண்டுள்ளது. வைட்டமின் B-6, வைட்டமின்-C, நார்ச்சத்து மற்றும் புரதம் பூண்டில் ஏராளமாக உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் 1 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கும். ஆனால் நிபுணர்கள் சொல்லும் விதத்தில் சாப்பிட வேண்டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் மேகா முகிஜா கூறியுள்ளார். மேகா முகிஜா 2016 ஆம் ஆண்டு முதல் Health Mania வின் தலைமை உணவியல் நிபுணர் மற்றும் நிறுவனர் ஆக இருந்து வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: எப்படிப்பட்ட தொப்பையையும் குறைக்க இலவங்கப்பட்டை பானத்தை குடியுங்கள்
நல்ல செரிமானத்திற்கு பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி உங்களுக்கு வாயுத்தொல்லை, அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தினமும் 1 பல் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 1 பல் பூண்டு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்றின் இரைப்பை சாற்றின் pH அளவை மேம்படுத்துகிறது, மேலும் இது வாயு உருவாவதற்கான சிக்கலையும் நீக்குகிறது. அதுமட்டுமின்றி பூண்டு குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பூண்டில் காணப்படுகின்றன இது பல வகையான குடல் நோய்த்தொற்றுகளை அகற்ற உதவுகிறது. புண்கள் மற்றும் இரைப்பை குடல் நோய்களைக் குறைக்கவும் பூண்டு உதவுகிறது.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேறும். பூண்டு கல்லீரலுக்கும் நல்லது. உடல் எடையை குறைக்க தினமும் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்.
குறிப்பு: பச்சை பூண்டு சாப்பிடுவது சில உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கலாம். அது போன்ற சூழலில் உணவு முறையில் சேர்க்கும் முன், ஒரு முறை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தூங்கும் முன் இந்த ஆயுர்வேத தேநீரை குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]