
காலையில் எழுந்திருக்கும் போது வெறும் வயிறுடன் இருப்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஆனால், வெறும் வயிறாக இருக்கும் போது நாம் செய்யும் சில பழக்கங்கள், நம் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அந்த வகையில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் செய்யக் கூடாத ஐந்து பழக்கங்கள் குறித்து இதில் காண்போம். இவை அனைத்தும் நமது உடலியல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கக்கூடியவை ஆகும். எனவே, இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
காலையில் சூடான காபி ஒரு அரவணைப்பு போல இருக்கலாம். ஆனால், வெறும் வயிற்றில் காபியை குடிக்கும் போது, அது வயிற்றில் அதிகப்படியான அமில உற்பத்தியை தூண்டுகிறது. ஆய்வுகளின் படி, இது வயிற்றின் உட்புற அடுக்கை எரிச்சலடைய செய்து, நெஞ்செரிச்சல் அல்லது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தலாம். எனவே, காபி குடிப்பதற்கு முன் சிறிது ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.

மேலும் படிக்க: தூக்கமின்மைக்கு தீர்வு: இந்த வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வது எப்படி?
வலி நிவாரண மாத்திரைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால், இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வது எரிச்சலை உண்டாக்கும். நீண்ட கால பழக்கமாக இது நீடித்தால், இரைப்பை புண் அல்லது உள் இரத்தப் போக்கு ஏற்படும் அபாயத்தை இது அதிகரிக்க செய்யும். மருந்துகளை எப்போதுமே சிறிது உணவு சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்வதே பாதுகாப்பானது. எனினும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி எடுத்துக் கொள்வது அவசியம்.
மேலும் படிக்க: மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகள்
எலுமிச்சை சாறு கலந்த நீர் உடலை நச்சு நீக்கம் செய்தாலும், பல மணி நேரம் உணவு இல்லாமல் இருக்கும் வயிற்றில் இதன் அமிலத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தலாம். சிட்ரிக் அமிலம் தினமும் காலையில் உட்கொள்ளப்படும்போது வயிற்றின் உள்பகுதியை பாதிக்கும். எனவே, எலுமிச்சை நீரை மிதமான அளவில் அல்லது உணவு சாப்பிட்ட பிறகு குடிப்பதே சிறந்தது.
காலையில் எழுந்திருக்கும் போதே நமது உடலில் கார்டிசால் ஹார்மோன் அளவு இயல்பாக அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில், அதிக கவலை அல்லது மன அழுத்தத்துடன் நாளை தொடங்கினால், இந்த ஹார்மோன் மேலும் உயரக்கூடும். வெறும் வயிற்றில் இந்த மன அழுத்தம் குமட்டல், தலைசுற்றல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். காலையில் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும், சுவாச பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.

உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்காமல், விழித்தவுடன் செல்போனில் நேரத்தை செலவிடுவது மனதளவில் சோர்வை ஏற்படுத்தும். காலையில் இதை செய்யும் மற்றும் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே, சிறிது ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு பிறகே வேலையை தொடங்குவது நல்லது.
இந்த எளிய மாற்றங்களை உங்கள் தினசரி பழக்கங்களில் மேற்கொள்வது, நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும், வயிறு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் பெரிதும் உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]