குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆஸ்துமா. ஆஸ்துமாவின் ஆரம்பகால அறிகுறிகளை கவனத்தில் கொண்டால், இந்த நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். சுவாசிக்கும் போது சிரமம் ஏற்படுதல், தூங்கும் போது மூச்சு திணறல், எளிதாக மூச்சுவிட முடியாத நிலை போன்றவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த நிலை "பிராங்கியல் ஆஸ்துமா" என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும், சரியான பராமரிப்பு மற்றும் கவனிப்புடன் இதனை கட்டுப்பாட்டில் வைத்து இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். அந்த வரிசையில் இந்த ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்படுத்த தேன் மற்றும் கலோஞ்சியை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆஸ்துமாவுக்கான காரணங்கள்:
இன்றுவரை ஆஸ்துமாவின் துல்லியமான காரணம் அறிவியல் உலகால் கண்டறியப்படவில்லை. எனினும், பல காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது: மரபணு காரணிகள், பல்வேறு ஒவ்வாமை நிலைகள், சுற்றுச்சூழல் மாசு, உணவு ஒவ்வாமை, தூசி மற்றும் பூச்சிகள், வாசனை திரவியங்கள் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள் என்ன?
மூச்சுவிடுவதில் கடினம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடும் போது சீழ்க்கை சத்தம், தொடர்ச்சியான இருமல் மற்றும் இரவு நேரத்தில் அறிகுறிகள் அதிகரிப்பது. துரதிர்ஷ்டவசமாக, ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது. இதற்கு காரணம், இதன் துல்லியமான காரணம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதே. எனினும், சரியான மேலாண்மை மூலம் இதன் அறிகுறிகளை கணிசமாக குறைக்க முடியும்.
ஆஸ்துமாவுக்கு தேன் மற்றும் கருஞ்சீரக எண்ணெயைப் பயன்படுத்தும் முறைகள்:
தேன் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் கலவை:
- 1 தேக்கரண்டி தேன் எடுத்து கொள்ளுங்கள், அதில் 1/2 தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய் கலந்து குடிக்கவும்.
- இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- இது உங்கள் சுவாசப் பாதைகளின் அடைப்பைக் குறைக்க உதவும்.
தேன், கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வெந்நீர்:
- 1 கப் சூடான நீருடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 5 துளி கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடிக்கவும்.
- இதை ஒரு நாளுக்கு 2 முறை காலை மற்றும் இரவு நேரத்தில் குடிக்க வேண்டும்.
- இது உங்கள் மூச்சுத்திணறலைக் குறைக்கிறது.
தேன் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் தூள்:
- 1 தேக்கரண்டி தேன் + 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகத் தூள் கலந்து சாப்பிடவும்.
- இதை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டும்.
- இது நுரையீரல் அழற்சியைக் குறைக்க உதவும்.
நெற்றியில் கருஞ்சீரக எண்ணெய் தடவுதல்:
- 2-3 துளி கருஞ்சீரக எண்ணெயை நெற்றியில் மெல்லத் தடவவும்.
- இதை இரவு படுக்கும் முன் பயன்படுத்தலாம்.
- இது மூச்சுத் திணறல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது.
குறிப்பு:
- 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் தேன் கொடுக்கக்கூடாது.
- இந்த கருஞ்ச்சீரக எண்ணெயை அதிக அளவில் சாப்பிடாமல் மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation