பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனை ஒன்று வயிற்றுப்புழு உருவாகும் நிலை. இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, சிறுநீர் கழிப்பிடப் பகுதியில் மற்றும் ஆசனவாய் அரிப்பு, உடல் சோர்வு, உணவில் ஆர்வம் குறைதல், இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல், பசி இல்லாமை போன்ற தொல்லைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையின் முக்கிய காரணம் குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, தூய்மை இல்லாத சூழலில் இருப்பது மற்றும் கழிப்பிற்கு பிறகு கைகளை முறையாக கழுவாதது போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
மேலும் படிக்க: 15 நாள் வீட்டில் தயாரித்த இந்த பானத்தை குடித்தால், 100 வருடம் ஆனாலும் சர்க்கரை நோய் வராது
குழந்தைகள் கைகளில் உள்ள கிருமிகள் உணவுக்கு இடம் பெயர்வதால் வயிற்றுக்குள் செல்லும் கிருமிகள் புழுக்களாக மாற வாய்ப்புள்ளது. இதை தவிர சமையலறை சுத்தமாக இல்லாமல் இருப்பது, காய்கறிகள் சுத்தமாக கழுவப்படாமல் சமைக்கப்படுவதும வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது கூட இந்த தொற்றுக்கு காரணமாகிறது. எனவே, குழந்தைகள் மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவரும் சுத்தம் சுகாதார பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இந்த பிரச்சனைக்கு நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய நாட்டு மருந்து உள்ளது. இது பலமுறை பரிசோதிக்கப்பட்டு நல்ல பலனை வழங்கியதாக கூறப்படுகிறது.
வெந்தயம், அரிசி பூண்டு, சீரகம் சேர்த்து கஞ்சி செய்து வாரம் இருமுறை காலை உணவாக கொடுக்லாம். நன்மைகள் - கிருமி தொற்று குறைந்து வயிற்று புழு பிரச்சினை தீரும். இந்த வகை நாட்டு மருந்துகள் பக்க விளைவுகள் இல்லாததும் இயற்கையானதும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை கேட்ப அல்லது அனுபவசாலிகள் பரிந்துரைப்படி பயன்படுத்துவது நல்லது. குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சுத்தம், உணவு பழக்கம் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் சுகாதார பழக்கங்கள் முக்கியமானவை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
மேலும் படிக்க: இந்த 5 பழக்கங்கள் 24 மணி நேரத்தில் உடலில் கொழுப்பை அதிகரிக்கும் - தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]