Lemon Tea Benefits : லெமன் டீ குடித்தால் இத்தனை நன்மைகளா ?

லெமன் டீ அருந்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இதை படித்தவுடன் நீங்களுக்கு லெமன் டீ அருந்த விரும்புவீர்கள் 

Lemon Tea called as RefreshingTea

சிறிய பசுமை தாவரமான எலுமிச்சை இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் வலுவூட்டப்பட்ட எலும்புகளுக்கு உத்தரவாதம் தருகின்றன.

எலுமிச்சை டீ செய்முறை

  • ஒரு எலுமிச்சையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாறு
  • சில இஞ்சி துண்டு
  • ஒன்றரை கப் தண்ணீர்
  • மூன்று ஸ்பூன் வெல்லம்
  • டம்ளரை அலங்கரிக்க எலுமிச்சை
  1. முதலாவதாக ஒரு கொள்கலனில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்
  2. அதன் பிறகு தீயை குறைத்து எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் வெல்லம் சேர்க்கவும்
  3. இவை அனைத்தையும் கலந்து அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்
  4. தற்போது லெமன் டீமை வடிகட்டி சூடாகப் பரிமாறவும்

ஊட்டச்சத்து

எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை ஒழுங்குபடுத்தும் பொட்டாசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. லெமன் டீயில் சேர்க்கப்படும் வெல்லம் இரும்பின் சக்தியாக இருக்கிறது. இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் போக்குவரத்துக்கு முக்கியமானதாக அமைகிறது.

நச்சு நீக்கம்

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலகத்தின் உள்ளடக்கம் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் லெமன் டீ குடிப்பதால் கல்லீரலில் ஏற்கனவே சேர்ந்திருந்த கழிவுகள் மற்றும் நச்சுகள் ஆகியவை வெளியேறுவதால் உடலில் முழுவதுமாக நச்சு நீக்கப்படுகிறது.

செரிமான செயல்பாடு அதிகரிப்பு

Better Digestion

லெமன் டீயில் சிறியளவிலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மற்றும் நார்களின் வடிவத்தில் இருக்கின்றன். இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதே நேரம் வளர்சிதை மாற்றமும் ஒழுங்குபடுகிறது. அதிகளவு உணவு உட்கொண்ட பிறகு லெமன் டீ குடித்தால் உடலில் செரிமானம் கணிசமாக மேம்படுகிறது.

தோல் ஆரோக்கியம்

Skin Glow

லெமன் டீயில் இறந்த சரும செல்களை அகற்றி உங்கள் முகத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும் அஸ்ட்ரிஜென்ட்கள் உள்ளன. எலுமிச்சை பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருக்கின்றன, இது முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சியை திறம்பட எதிர்த்து ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

Heart Health

ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் போன்ற எலுமிச்சையில் உள்ள தாவர ஃபிளாவனாய்டுகள் கொழுப்பைக் குறைக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. மாலை நேரத்தில் லெமன் டீ பருகினால் இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்பை தடுக்கலாம்.

மேலும் படிங்கDiabetes in Women : பெண்களே உஷார்! சரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்

குறிப்பாக லெமன் டீயில் இஞ்சியைச் சேர்த்துப் பருகுவது உடலுக்குத் தேவையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளை வழங்குகிறது. இது குமட்டல் மற்றும் தசை வலியைக் குறைக்க உதவுவதோடு பசியை அடக்கும் மருந்தாகவும் உதவுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP