வளர்சிதை மாற்றம் எனும் மெட்டபாலிஸம் தொடர்புடைய பல உடலியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. இதன் அடிப்படையில், தூக்கப் பழக்கம் மற்றும் தூக்கக் கோளாறுகள் நீரிழிவு அபாயத்துடன் தொடர்புடையவை எனக் கூறுவதற்கு கணிசமான சான்றுகள் உள்ளன.
பெண்களுக்கு அதிகளவில் இந்த நோய் ஏற்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் படிங்க கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடுவது நல்லதா?
தொடர்ச்சியாக ஆறு வாரத்திற்கு 90 நிமிடங்கள் தூக்கத்தை பெண்கள் இழந்தால் ஒட்டுமொத்தமாக உடலில் இன்சுலின் குறைவு 12% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இன்சுலின் குறைவு 15% ஆக உள்ளது. இயல்பாகவே ஒரு மனிதன் தினமும் சராசரியாக 8-9 மணி நேரம் தூங்க வேண்டும்.
ஆறு வாரங்களுக்குத் தூங்கும் நேரம் லேசாகக் குறைக்கப்படும் போதே உடலில் பல மாற்றங்கள் உண்டாகி அது பெண்களுக்கு நீரிழிவு நோய் அபாயத்தினை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மோசமான தூக்கம் ஆண்களின் உடல் ஆரோக்கியத்தை விட பெண்களின் உடல் ஆரோக்கியத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாதவிடாய், பிரசவ காலம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பெண்களின் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆண்கள் தாங்கள் தூங்குவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கின்றனர். இந்த ஆய்வு மிகவும் ஆரோக்கியமான 38 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேர் மாதவிடாய் நின்ற பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தினமும் சராசரியாக ஏழு மணி நேரம் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
மேலும் படிங்க பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் உடலுறவு வாழ்க்கையில் எப்போது ஈடுபடலாம்?
இரண்டு கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. முதல் கட்டத்தில் அனைத்து பெண்களும் போதுமான நேரம் தூங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்டத்தில் தூங்கும் நேரத்தை ஏழு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்கு குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு கட்ட ஆய்வுகளும் ஆறு வாரங்களுக்குத் தொடரப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து பெண்களின் சராசரி இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருந்துள்ளது.
ஆனால் நீண்ட காலத்திற்கு இது தொடரும்போது உடலில் ஏற்படும் மன அழுத்தம் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களில் பாதிப்பை உண்டாக்கி “டைப் 2” நீரிழிவு நோய்க்கு வழிவகுத்து விடும். இதனால் பெண்கள் தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]