herzindagi
can we eat non veg during pregnancy know here

கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடுவது நல்லதா? நிபுணரிடம் இருந்து சரியான பதிலை அறிந்து கொள்ளுங்கள்..

கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அதிகம் தேவைப்படுவதால், பெண்கள் அசைவத்தை விரும்புகிறார்கள்.ஆனால் கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவது நல்லதா?
Editorial
Updated:- 2023-09-04, 03:00 IST

கர்ப்ப காலத்தில் அசைவம்: கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகிய தருணமாகும். இந்த காலகட்டத்தில், பெண்கள் பல வகையான மன மற்றும் உடல் சம்பந்தப்பட்ட மாற்றங்களை சந்திக்கின்றனர். கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக, சரியான உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நேரத்தில் புரதம் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் புரதத்தை பெற, பெரும்பாலான பெண்கள் அசைவத்தையே விரும்புகிறார்கள். இப்போது கேள்வி என்னவென்றால், கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்பது தான். அசைவம் உண்மையாகவே நல்லதா? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கிறார் உணவியல் நிபுணர் பிரியங்கா ஜெய்ஸ்வால், வாருங்கள் பார்ப்போம் .

கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் புரதத்தின் தேவை அதிகமாக உள்ளது. எனவே இந்த நேரத்தில் குறைந்த அளவு கோழி சாப்பிடுவது நல்லது என்கின்றனர். சிக்கன் ஜீரணிக்க எளிதானது, இதிலிருந்து புரதமும் கிடைக்கும். இரும்புச்சத்து குறைபாடும் நீங்கும். தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தேவையான வைட்டமின் B12, வைட்டமின் A மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. அசைவ உணவுகளை மிகவும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத கோழியை சாப்பிடுவது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரத்தில், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியை சாப்பிட கூடாது என்கின்றனர் நிபுணர்கள். இது தாய், சேய் இருவருக்கும் பாதுகாப்பற்றது.

food pregnancy

கர்ப்ப காலத்தில் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

  • ரெட் மீட் அதாவது ஆட்டிறைச்சியில் போதுமான அளவு புரதம்,     வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்குமாம். ஆனால் இதனை அதிகமாக உட்கொண்டால், அது தாய், சேய் இருவருக்கும் தீங்கு விளைவிக்கும் என்கின்றனர்.
  • கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சியை அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக சர்க்கரை வியாதி அபாயம் பலமடங்கு அதிகரிக்கும்.
  • ஆட்டிறைச்சி எளிதில் ஜீரணமாகாது. அதை ஜீரணிக்க உடல் மிகவும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது. அதேசமயம் பெண்களின் செரிமான அமைப்பு கர்ப்ப காலத்தில் மெதுவாகவே வேலை செய்கிறது. இதன் காரணமாக, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
  • ஆட்டிறைச்சியை சரியாக சுத்தம் செய்யாவிட்டாலோ அல்லது சரியாக சமைக்காவிட்டாலோ உணவு நஞ்சாதல் தன்மை உண்டாகும் அபாயம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் நச்சுத்தன்மையை பரப்பி, கருச்சிதைவுக்கும் வழிவகுக்கும்.
  • கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிடுவது எப்படி?
  • கர்ப்பிணிகள் ஆட்டிறைச்சி சாப்பிட விரும்பினால்,  புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியை மட்டுமே சமைத்து சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனை நன்கு வேகவைக்கவும் வேண்டும். வேகவைத்த மற்றும் கிரில் செய்யப்பட இறைச்சியை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற பதிவுகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]