herzindagi
Malvaceae Family

Hibiscus benefits : அனைத்து வகையிலும் மனிதர்களுக்கு பயன்படும் செம்பருத்தி

செம்பருத்தி தலைமுடியை அழகுகாக்குவதற்கு மட்டுமல்ல பல வழிகளில் உடலுக்கு பலன் அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன
Editorial
Updated:- 2024-02-24, 21:06 IST

ரோசெல்லே என்று அழைக்கப்படும் செம்பருத்தி பூ இந்தியா மற்றும் மலேசியாவில் பூக்கும் ஒரு வகை பூக்கும் தாவரமாகும்.இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. செம்பருத்தியில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. மிகவும் பொதுவாகப் பயிரிடப்படும் வகை ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் காணப்படும் 

செம்பருத்தியின் பயன்கள்

நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான செம்பருத்தியின் விளைவுகள் அதன் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். செம்பருத்தியை கொண்டு தயாரிக்கப்படுபவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவிடும் 

இரத்த அழுத்தம்

செம்பருத்தி தயாரிப்புகள் மற்றும் செம்பருத்தியை உள்ளடக்கிய பானங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என பல மனித சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளன.

உயர் இரத்த அழுத்தம் கொண்ட 46 முதியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு மாதத்திற்கு இரண்டு கப் அதாவது 474 மில்லி செம்பருத்தி தேநீர் குடித்தால் அது வாழ்க்கை முறை மற்றும் உணவு உட்கொள்ளல் மாற்றங்களைவிட இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைத்துள்ளது.

மேலும் செம்பருத்தி சாறு உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என மற்ற ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்லன. எனினும் இதை உறுதிப்படுத்த தொடர் ஆராய்ச்சிகள் தேவை

மேலும் படிங்க Hairfall Prevention : குளிர்காலத்தில் முடி உதிர்வு பிரச்சினையா? கவலை வேண்டாம்

பருமனான உடல் 

Hibiscus for weight loss

செம்பருத்தி பூ உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்றும் அதே நேரத்தில் உடல் பருமனில் இருந்து பாதுகாக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. விலங்குகள் மீது ஆராய்ச்சி செய்தபோது செம்பருத்தி சாறு உடலில் கொழுப்பு செல்கள் குவிவதை தடுக்க உதவிடும் என கண்டறியப்பட்டது.

மேலும் இன்சுலின் எதிர்ப்பு, கல்லீரலில் அதிக கொழுப்பு போன்ற உடல் பருமன் சிக்கல்களையும் தடுக்க செம்பருத்தி உதவிடுகிறது. செம்பருத்தியில் உள்ள நார்ச்சத்து எடை அதிகரிப்பை தடுக்கவும் உதவிடுகிறது. அதிக சாதக அம்சங்கள் இருந்தாலும் செம்பருத்தியின் உடல் பருமன் எதிர்ப்பு விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு மனித ஆய்வுகள் ஆவசியமாகும்.

கல்லீரல் பாதிப்பு

Liver health

கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் சில பிரச்சினைகளில் இருந்து செம்பருத்தி உங்களை பாதுகாக்கிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் செம்பருத்தி சாறு கீமோதெரபி மருந்துகளுடன் தொடர்புடைய கல்லீரல் நச்சுத்தன்மையில் இருந்து அவற்றை பாதுகாத்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்குக் கிடைக்கும் செம்பருத்தியின் நன்மைகள் மனிதர்களுக்கும் கிடைக்குமா என்பது விரிவான ஆராய்ச்சிகளிலேயே தெரியவரும்.

மேலும் படிங்க Sweet potato : ஊட்டச்சத்துகளின் அரசன் “சர்க்கரைவள்ளி கிழங்கு”

Cancer risk

புற்றுநோய்

செம்பருத்தியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற கலவைகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கலாம். இதை அறிவதற்கு பெரிய அளவிலான மனித சோதனைகள் தேவை.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]