குளிர்காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் முடிகொட்டும் பிரச்சினை அதிகமாகிவிடும். குளிக்கும்போது தலையிலிருந்து வழக்கத்தைவிட அதிகளவு முடி கொட்டுவதை நம்மால் பார்க்க முடியும். பருவங்கள் மாறும் போது நம்முடைய சருமத்தில் மாற்றங்களைக் காண்பது போலவே, குளிர்காலத்தில் முடி உதிர்தல் சுறழ்சி ஏற்படும். இக்காலத்தில் முடி உதிர்வு ஏற்படக் முக்கிய காரணம் வறண்ட காற்று. இது உங்களது உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலுமாக உறிஞ்சி விடுகிறது. ஈரப்பதம் உறிஞ்சப்படுவதனால் உச்சந்தலை மட்டுமின்றி முடியும் வறண்டு முடி உதிர்வு ஏற்படுகிறது. உச்சந்தலை உலர்ந்து விடுவதால் பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை நாம் சந்திக்கிறோம்.
குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுக்க உதவும் குறிப்புகள்
தலைமுடிக்கு எண்ணெய் தடவவும்
குளிர்காலத்தில் முழுமையான எண்ணெய் மசாஜ் செய்வதை விட வேறெதுவும் சிறந்த பலனை அளிக்காது. குளிர்காலத்தில் முடி உதிர்வை தடுக்க இது ஒரு சிறந்த நுட்பமாகும். பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். இவை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு தேவையான வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்களை வழங்கும். முடியை அடர்த்தியாக வைத்திருக்கும் பொருட்களையும் பயன்படுத்துங்கள்.
ஸ்டைலிங் தவிர்க்கவும்
குளிர்காலம் முடியும் வரை ஹேர் ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டைத் தவிருங்கள். நீங்கள் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் போது தலை வறட்சியடைவதோடு முடி உடைந்து உதிர்கிறது. ஏற்கெனவே குளிர்காலத்தின் வறண்ட காற்று தலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் ஸ்டைலிங் கருவிகளும் முடியில் தாக்கத்தை உண்டாக்குகின்றன.
மேலும் படிங்கசரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்
ஈரமான முடி
குளிர்காலத்தில் வறண்ட முடியுடன் ஒப்பிடும்போது ஈரமான முடி அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அதனால் எக்காரணத்திற்கும் ஈரமான தலையுடன் வெளியே செல்ல வேண்டாம். அப்படி சென்றால் முடி உறைந்து உடைந்துவிடும்.
மேலும் படிங்கபெண்களே உங்களுக்கு “வைட்டமின் கே” குறைபாடா ?
ஆரோக்கியமான உடல்நலம்
குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகளைச் சாப்பிட்டு போதுமான அளவு நீர் அருந்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். குளிர்காலத்தில் முடி பராமரிப்புக்கு ஈரப்பதம் தக்கவைத்தல் மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் தலைமுடியை அதிகமாகக் கழுவ வேண்டாம். தலைமுடி மிகவும் வறண்டு இருந்தால் மட்டுமே தேவையான இடைவெளிகளில் கழுவ வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation