தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்களா? அப்ப தூங்குவதற்கு முன் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!

மனிதர்களுக்கு தூக்கமின்மை கொடிய நோயாக உருவெடுக்கும் என்பதால் தினமும் கட்டாயம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.

foods to help sleeping food

நம்முடைய வாழ்க்கையை மன நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் மாற்றுவதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்று. என்றைக்கு நாம் மொபைல்,கணினி, வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோமோ? அன்றைய நாளிலிருந்து தூக்கம் நம்மை விட்டு சென்று விட்டது. நாள் முழுவதும் வேறு பணிகளில் இருக்கும் பலருக்கு, இரவு நேரம் தான் மொபைலில் சோசியல் மீடியாக்களைப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கிறது.

அமைதியான சூழலில், நமக்கு பிடித்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, தூக்கம் வரவே செய்யாது. இதையே நாம் தொடர்ச்சியாக செய்து வரும் போது, மொபைலை பார்க்கா விட்டாலும் குறிப்பிட்ட நேரத்திற்குத் தூக்கம் வராது. மேலும் குடும்ப சூழல், கடன் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சந்திக்கும் பலருக்கும் இரவில் தூக்கமே வராது. மனிதர்களுக்கு தூக்கமின்மை கொடிய நோயாக உருவெடுக்கும். எனவே நல்ல தூக்கத்திற்கு நீங்கள் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

sleepless

நல்ல தூக்கத்தைத் தரக்கூடிய உணவுகள்:

பால்:

தூக்கமின்மை பிரச்சனையைப் பலர் சந்தித்து வருகின்றனர். இதனால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக சூடாக பால் குடிக்கவும். இதில் உள்ள கால்சியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தூக்கத்திற்கு உதவியாக இருக்கும் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் போன்றவற்றை அதிகளவில் உற்பத்தி செய்கிறது. இது இரவு முழுவதும் அமைதியான தூக்கத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது.

பழங்கள்:

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுப்பதற்கு பழங்கள் சிறந்த தேர்வாக அமையும். சில நேரங்களில் அளவுக்கு அதிமாக சாப்பிடும் போது வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் இரவில் தூக்கமின்மை ஏற்படும். எனவே என்ன சாப்பிட்டாலும், எளிதில் செரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய பழங்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக வாழைப்பழம் ஆப்பிள, அவகேடா, கிவி பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

கொஞ்சமாக உணவை சாப்பிடுதல்:

இரவில் தூங்காமல் பல மணி நேரம் முழித்துக் கொண்டு இருக்கும் போது, கொஞ்சம் சாப்பிட்டு தூங்கு, இல்லை தூங்க வராது என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம் இரவில் சரியாக சாப்பிடவில்லையென்றால் திடீரென இரவில் பசி உணர்வு ஏற்பட்டு தூக்கத்தைக் கலைத்து விடும். எனவே தூங்க செல்லும் முன்னர் கொஞ்சமாக சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க:இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்

sleeping food

ஒருவேளை நீங்கள் இரவில் வயிறு நிறைய சாப்பிடும் போது, செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். வயிற்று வலி, நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கொஞ்சம் குறைவாக சாப்பிட வேண்டும். குறிப்பாக காரமான உணவுகள் மற்றும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP