ஒல்லியான தோற்றத்தைப் பெற வேண்டுமா? கொஞ்சம் புதினா தண்ணீர் குடிச்சுப் பாருங்க!

புதினா தண்ணீர் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுவதால் செரிமான மண்டலத்தை சீராக்கி, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கிறது. 

pudina helps for weight loss

இன்றைய பெண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது உடல் பருமன். ஒல்லியாக இருக்கும் போது கொஞ்சம் உடம்பு பூசினாற் போல் இருந்தால் நல்லா இருக்கும் னு நினைப்போம். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. எந்த ஆடை உடுத்தினாலும் அழகாக இல்லை, அதிகரித்த எடையைக் குறைக்க என்ன செய்வது? என்ற தேடல்கள் அதிகம் இருக்கும். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

ஆம் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடுகளை ஒருபுறம் பின்பற்றி வந்தாலும், அது ஆரோக்கியமாக உள்ளதா? என கண்டறிந்த பின்னர் தான் டயட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இன்றைக் புதினாவைக் கொண்டு செய்யப்படும் பானம் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது? வேறு என்னெ்ன நன்மைகளை இதன் மூலம் பெற முடியும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

weight loss drink ()

உடல் எடைக் குறைப்பிற்கு புதினா பானம்:

  • ப்ரஸ்ஸாக உள்ள புதினா இலைகளை எடுத்துக் கொண்டு அதை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தலாம். இல்லையெனில் புதினா இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை தண்ணீர் ஊற வைத்து பின்னர் இதை வடிகட்டி பயன்படுத்தலாம். எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • புதினா இலைகளில் இயற்கையான சேர்மங்கள் உள்ளது. இவற்றை வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. தேவையில்லாத ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியும். அளவுக்கு அதிகமாகவும், கண்ட நேரங்களில் சாப்பிடுவதால் ஏற்படும் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • புதினா தண்ணீர் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுவதால் செரிமான மண்டலத்தை சீராக்கி, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்கிறது.
  • புதினா இலைகளில் உள்ள மெந்தோல் செரிமான அமைப்பை சீராக்குகிறது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயு,வீக்கம், அஜீரணம் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவியாக உள்ளது.
  • உங்களால் புதினா இலைகளைக் கொண்டு செய்யப்படும் பானத்தை அப்படியே குடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தால், புதினா சட்னி மற்றும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய டீ போன்றவற்றிலும் புதினா சாறை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:உடல் சூட்டைத் தணிக்கும் சியா விதைகள்; உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை!

mint water for weight loss

இது போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவேளை புதினா பானத்தை நீங்கள் பருகும் போது நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தினால், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP