உடல் சூட்டைத் தணிக்கும் சியா விதைகள்; உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை!

பல்வேறு நன்மைகளை சியா விதைகள் வழங்கினாலும்  அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் தினமும் 50 கிராம் அளவிற்கு குறைவாக சாப்பிட வேண்டும்

chia seeds for summer hear

சுட்டெரிக்கும் வெயிலால் நம்மில் பலருக்கு சூடு பிடிப்பது முதல் உடல் சோர்வு போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். என்ன தான் உடல் சூட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வெந்தயம், குளிர்ச்சியான பானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினாலும் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என்றால் நிச்சயம் சவாலானதாக அமையும். இது போன்ற நிலை உங்களுக்கும் ஏற்பட்டால் கோடைக்காலத்தில் உடல் சூட்டைக் குறைப்பதற்கு சியா விதைகளைப் பயன்படுத்துங்கள். அது என்ன சியா விதைகள்? எப்படியெல்லாம் உங்களது உணவு முறையி்ல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

health benefits of chia seeds

சியா விதைகளைப் பயன்படுத்தும் முறை:

  • சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், ஆன்டி ஆக்சிடன்டகள், நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய பல உடல் நல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • சியா விதைகள் உங்களது உடல் சூட்டைத் தணிக்க பெரிதும் உதவும் என்பதால் நீங்கள் தண்ணீர் அல்லது ஜுஸில் இதை கலந்துக் குடிக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி, செரிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக உள்ளது.
  • அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று குடிக்கலாம் என்று நினைப்போம். வீடுகளில் சர்பத், ஸ்மூத்தி, ஜூஸ், மில்சேக், சாலட்டுகள் என பிடித்த குளிர்பானங்களை செய்து சாப்பிடுவதற்கு ஆசைப்படுவோம். வெயிலில் தாகத்தைத் தணிப்பதற்கு உதவியாக இருந்தாலும், சியா விதைகளைச் சேர்க்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சூட்டைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது. மேலும் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்க முடியும்.
  • சியா விதைகளை பால், தேன், வெண்ணிலா சாறு, கோ கோ பவுருடரை சேர்ந்து கலந்துக் கொள்ளவும். இதை இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து காலையில் எடுத்தால் போது சியா ஐஸ்கிரிம் ரெடி. இதை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடும் போது சுட்டெரிக்கும் வெயிலில் உடல் சூட்டைத் தணிக்க உதவியாக இருக்கும்.
  • வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய உடல் சூட்டைத் தவிர்க்க சியா ஜூஸ் செய்து சாப்பிடலாம். கால் கப் சியா விதைகளை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் சுவைக்காக எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழத்தைச் சேர்த்து பருகலாம்.

மேலும் படிக்க: சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? பல தானிய தோசைகளை ட்ரை பண்ணுங்க!

chia seeds for summer

இது போன்று பல்வேறு நன்மைகளை சியா விதைகள் வழங்கினாலும் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் தினமும் 50 கிராம் அளவிற்கு குறைவாக சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP