herzindagi
weight gain  for children

உங்களது குழந்தைகள் கொலு கொலுன்னு இருக்கணுமா? இதை மட்டும் சாப்பிட குடுங்க!

<span style="text-align: justify;">&nbsp;குழந்தைகளின் எடையை அதிகரிக்க விரும்பினால், அவர்களது தினசரி உணவில் குறைந்தது 40 சதவீதம் கார்போஹைட்ரேஸ் கொடுக்க வேண்டும்</span>
Editorial
Updated:- 2024-04-02, 17:38 IST

கொலு கொலுன்னு இருக்கிற குழந்தைகளைப் பார்க்கும் போதே அவ்வளவு ஆசையாக இருக்கும். நம்முடைய குழந்தைகளும் இது போன்று இருக்க வேண்டும் என்ற நினைப்பு ஒவ்வொரு தாய்மார்களுக்கும் இருக்கும். இதற்காகப் பிடித்த உணவுகள் பலவற்றை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனாலும் சில குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கவே செய்யாது. என்ன தான் அதிகமாக சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். இது அம்மாக்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கும். இந்த நேரத்தில் என்ன உணவுகளைக் கொடுத்தால் உடல் எடையை அதிகப்படுத்தலாம் என்ற தேடல் நிச்சயம் இருக்கும். இவற்றில் நீங்களும் ஒருவராக இருந்தால் இதோ இந்த கட்டுரையைக் கொஞ்சம் வாசித்திட்டு போங்க.

weight gain kids

மேலும் படிக்க: கோடையில் கொழுப்பை குறைக்க நீரேற்றம் செய்யும் இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்:

  • குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக பீட்சா, பர்கர் மற்றும் நொறுக்குத் தீனிகள் பலவற்றை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதே வேளையில் பல்வேறு உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படும். எனவே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கான உணவு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பால்: குழந்தைகளின் எடையை அதிகரிக்க நினைக்கும் பெற்றோர்கள், கட்டாயம் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் ஒரு டம்பளர் பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதில் அதிகம் புரதம், கால்சியம் மற்றும் கார்போரரைட்ஹேட்டுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையையும் அதிகரிக்க முடியும்.
  • பழங்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துள்ள பழங்களைக் கட்டாயம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழங்கள் அவர்களின் ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு உடல் எடையை அதிகரிக்கவும் உதவியாக உள்ளது.

milk

  • முட்டை: குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் அவர்களுக்குப் புரதம் நிறைந்த முட்டைகளைக் கொடுக்க வேண்டும். தினசரி உணவுகளில் முட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போன்ற பல முறைகளில் செய்துக் கொடுக்கலாம்.
  • பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றால், கடைகளில் வாங்கிக் கொடுப்பதை நிறுத்திவிட்டு வீட்டில் செய்யக்கூடிய இடியாப்பம்,  வேக வைத்த பயறு வகைகள், முளைக்கட்டிய பயறுகள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுத்து பழக வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க: கல்லீரலை சுத்தப்படுத்த இந்த ஜூஸ்களை குடித்து பாருங்க!

kids menu

பொதுவாக குழந்தைகளின் எடையை அதிகரிக்க விரும்பினால், அவர்களது தினசரி உணவில் குறைந்தது 40 சதவீதம் கார்போஹைட்ரேஸ் கொடுக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றார் போல் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் காய்கறிகளைச் சாப்பிடவில்லையென்றாலும் அவர்களுக்கு ஏற்றவாறு அதை சமைத்துக் கொடுக்க வேண்டும்.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]