நம் உடலை ஆரோக்கியமாக வைக்க முதலில் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரல் நமது உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு என்று கூறலாம். இந்த உறுப்பு எவ்வளவு பெரியதோ, அந்த அளவிற்கு அதன் செயல்பாடு கூட பெரியது. இந்த கல்லீரல் நம் உடலில் 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வேலைகளை செய்கிறது. பைல் ஜூஸை (Bile juice) உற்பத்தி செய்ய கல்லீரல் உதவுகிறது. பல உடல் செயல்முறைகளுக்கு இந்த பைல் ஜூஸ் மிகவும் அவசியமான ஒன்று. இந்த மஞ்சள் நிறத்தில் உள்ள பைல் ஜூஸ் வயிற்றில் செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. நம் கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் சில ஆரோக்கிய பானங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எலுமிச்சை தண்ணீரில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. தினசரி காலையில் எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பலரும் பால் டீயை குடிப்பதை விட பல ஆரோக்கிய பானங்களை தினசரி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் பெரும்பாலானோர் குடிக்கும் ஒரு வகையான ஆரோக்கியமான டீ இந்த கிரீன் டீ. இந்த கிரீன் டீயில் கேட்டசன்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புக்கு கிரீன் டீ மிகவும் பிரபலம் ஆன ஒரு உணவு என்று கூட சொல்லலாம். தினசரி கிரீன் டீ குடிப்பதினால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸில் பீட்டா லைன்கள் உள்ளது. இது கல்லீரலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க பெரிதும் உதவுகிறது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த பீட்ரூட்டில் நிறைந்துள்ளது. மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் கூட தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து குடித்து வரலாம்.
நாம் தினசரி சமைக்கும் உணவுகளில் மஞ்சள் கண்டிப்பாக சேர்ப்பது வழக்கம். இந்த மஞ்சளில் குறுக்குமின் என்ற அமிலம் ஒன்று உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டது. நம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி மஞ்சள் டீ குடித்து வரலாம்.
இந்த ஆப்பிள் சிடார் வினிகரில் அசிடிக் அமிலம் அதிக அளவு நிறைந்துள்ளது. இது கல்லீரலை ஆரோக்கியமாக மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த ஆப்பிள் சிடார் வினிகர் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குடித்து வரலாம்.
கோடை காலம் என்று சொன்னாலே பலருக்கும் இந்த தர்பூசணி பழம் நினைவுக்கு வரும். தர்பூசணியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. நம் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸ் குடித்து வரலாம்.
இந்த கிரான்பெர்ரி ஜூஸில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் கல்லீரலை சேதம் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]