நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான பழம் இந்த பப்பாளி. இந்த பப்பாளியில் சுவை மட்டுமில்லாமல் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்கவும், நீரிழிவு நோய் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை பப்பாளி பழம் தருகிறது. தினசரி வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு வழிகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
இந்த பப்பாளி பழத்தில் பப்பைன் என்ற அமிலம் ஒன்று உள்ளது. இந்த அமிலம் நம் உணவு செரிமானத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம் உணவு செரிமானம் மேம்படும். இதனால் நாள் முழுவதும் உங்களை பசி எடுக்காமல் வயிறு நிறைந்த உணர்வை அளிக்க உதவும். மேலும் நார்ச்சத்து இந்த பழத்தில் அதிகம் உள்ளதால் உடலுக்கு நல்லது.
அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட ஒரு பழம் இந்த பப்பாளி. இது நம் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க பெரிதும் உதவுகிறது. வெறும் வயிற்றில் தினசரி பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பப்பாளி பழம் மற்ற பழங்களை போல இல்லாமல் நீரிழிவு நோய் மற்றும் அதிக சர்க்கரை கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
இந்த பப்பாளி பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் எ;அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்க உதவுகிறது. இது நம் உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தினசரி வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் வீக்கத்தின் அளவை குறைப்பதன் மூலம் நாள்பட்ட நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.
இந்த பப்பாளி பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவு இருப்பதால் உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு. தினசரி வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.
பப்பாளி பழத்தில் உள்ள பொட்டாசியம் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் மற்றும் நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]