கோடை காலம் வந்து விட்டாலே போதும் நம்மில் பலருக்கும் அடிக்கடி உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நாம் கோடைகாலத்தில் உட்கொள்ளும் உணவு வகைகள் என்று கூட சொல்லலாம். கோடை காலத்தில் ஜில்லாக மில்க் ஷேக் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை சாப்பிட அனைவருக்குமே ஆசையாக இருக்கும். ஆனால் இது போன்ற கூலிங் ஆன ஐஸ்கிரீம் அல்லது மில்க் ஷேக்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் நம் உடல் டிஹைட்ரேட் ஆக வாய்ப்புகள் அதிகம். கொளுத்தும் கோடை வெயிலுக்கு எந்த உணவுகளை சாப்பிடலாம் மற்றும் எந்த உணவுகளை சாப்பிடவே கூடாது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் உடலை ஹைட்ரேட் ஆக வைத்திருப்பது அவசியம். உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க நீங்கள் விரும்பினால் இந்த கோடை காலம் முழுவதும் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். இதை கேட்பதற்கு சற்று கடினமாக இருந்தாலும் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் வழக்கத்தை விட குறைவான அளவு காபி குடித்து வரலாம். உதாரணமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி குடிப்பவர்கள் இந்த கோடை வெயிலுக்கு ஒரு கப் காபி குடிப்பது போதுமானது.
தினசரி உணவில் ஊறுகாய் சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த ஊறுகாயில் சோடியம் அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலில் நீரிழிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் கோடை காலத்தில் ஊறுகாயை அதிகம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இவை உடலில் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. இதனால் கோடை காலத்தில் உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் உணர்வு மற்றும் அடிக்கடி சோர்வு ஏற்படக்கூடும்.
கோடை வெயில் காலத்தில் நாம் காரமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் வெப்பம் அதிகரித்து விடும். இதனைத் தொடர்ந்து அதிகப்படியான வியர்வை, நீரிழிப்பு மற்றும் கோடைகால நோய்களும் ஏற்படலாம். இதனால் கோடைகாலத்தில் காரமான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
ஏற்கனவே வெப்பம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். அப்போது இந்த கிரில்ட் சிக்கன் வகைகளை சாப்பிடும் போது நம் உடல் வெப்பநிலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும். இதனால் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே கோடை வெயிலுக்கு கிரில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த கோடை காலத்தில் மது அருந்தினால் உடல் வெப்பநிலை அதிகரித்து தலைவலி, வாய் வறட்சி, வயிற்று கோளாறு பிரச்சனைகள் போன்ற நோய்கள் ஏற்படலாம். பொதுவாகவே நாம் மது அருந்தும் போது நம் உடல் டிஹைட்ரேஷன் அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே இந்த வெயில் காலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]