இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் உடல் நலத்தை பேணி காக்க மறந்து விடுகிறோம். உடல் நலமே மனநலம் என்று கூறுவார்கள். அது போல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினால் தான் மனமும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் முதலில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவர்கள் குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடித்து வந்தால் எளிதாக உடல் எடை குறையும். இந்த லவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடி எளிதாக உடல் எடை குறைக்க இந்த இலவங்கப்பட்டை தண்ணீர் உங்களுக்கு உதவலாம்.
நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிகவும் இன்றி அமையாத ஒரு விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த பிசியான வாழ்க்கை முறையில் தண்ணீர் குடிப்பதையே நம்மில் பலரும் மறந்து விடுகிறோம். ஒரு பாட்டில் தண்ணீரை குடிக்க கூட நம்மில் பலருக்கும் சோம்பேறித் தனமாக உள்ளது. நம் உடல் உறுப்புகள் சீராக செயல்பட தண்ணீர் மிகவும் அவசியமான ஒரு விஷயம். ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் வரை குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான இடைவேளைகளில் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உணவு செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது.
தினசரி அதிகாலை எழுந்ததும் ரெண்டு முதல் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை பழம் ஜூஸ் அல்லது பட்டை பொடியை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். அதே மாதிரி நீங்கள் வெளியில் சென்றாலும் ஒரு பாட்டில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். அந்த தண்ணீரில் பட்டை பொடி சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதற்கு வாட்டர் ஆப் போன்றவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். எனவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உங்களுக்கு மறக்காமல் இருக்கும். அலுவலகத்தில் வேலையின் போது கூட ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து சென்று தண்ணீர் குடியுங்கள்.
நம் உடலில் மெட்டபாலிசித்தை அதிகரிக்க பயன்படுத்தும் ஒரு சிறந்த மருந்து இந்த லவங்கப்பட்டை. பாக்டீரியா எதிர்ப்பு சத்து இந்த லவங்கபட்டையில் இருப்பதால் நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். அதேபோல இந்த லவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவு நிறைந்துள்ளதால் செல்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். மேலும் டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்தும் சக்தி இந்த லவங்கபட்டைக்கு உண்டு. தினசரி இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறைவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த லவங்கப்பட்டை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தவும் மூட்டு வலியை சரி செய்யவும் லவங்கப்பட்டை உதவி செய்யும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]