நம் முன்னோர்கள் காலத்தில் பிரபலமான ஒரு ஆரோக்கியமான தானிய வகைகளில் ஒன்று இந்த ராகி. இந்த ராகி இன்றைய காலகட்டத்தில் பலரின் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து மறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த ராகி சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ராகி பெரிதும் உதவுகிறது. உங்கள் தினசரி உணவில் இந்த ராகியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஊட்டச்த்துக்கள் நிறைந்த மற்ற தானியங்களை விட இந்த ராகியில் 5 முதல் 30 மடங்கு அதிகமாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்கி எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேப் போல இந்த ராகியில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் படிக்க: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்
நம் உடலில் உள்ள ட்ரை க்ளிசரைடுகளின் செறிவை குறைக்க இந்த ராகி பெரிதும் உதவுகிறது. தினசரி உணவில் ராகி சேர்த்து சாப்பிட்டு வந்தால் எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடலில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகரிக்கும். குறிப்பாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட எல்டிஎல் என்று கூறப்படும் கெட்ட கொழுப்புகள் வீக்கம் அடைய தொடங்கும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறையும்.
நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் இந்த ராகியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த ராகியில் உள்ள கால்சியம் சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் இந்த ராகியில் உள்ள இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட நபர்களும் காலை உணவாக இந்த ராகியை சாப்பிட்டு வரலாம். அதேபோல ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நபர்களும் மாத்திரைக்கு பதிலாக இந்த ராகியை மருந்தாக சாப்பிடலாம்.
ராகி, வரகு போன்ற சிறு தானிய வகைகளில் முதிர்ச்சியை தடுக்க உதவும் பினாலிக் அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. உங்கள் தினசரி உணவில் ராகியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொலாஜன் அதிகரிக்கும். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் முதுமையை தடுக்க இந்த கொலாஜன் பெரிதும் உதவுகிறது. நம் சருமம் மற்றும் ரத்த நாளங்களில் கொலாஜன் செயல்பாடு அதிகரிக்க உதவும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்த ஒரு சிறந்த தானியம் இந்த ராகி இந்த. ராகியின் மேற்புறத் தோலில் உள்ள பினாலிக் அமிலங்கள் மற்றும் பிளவனைடுகள் நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்கள் மூலம் ஏற்படும் சேதத்தை தவிர்த்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. கோதுமை மைதா வகை உணவுகளை சாப்பிடும் நபர்களை விட இந்த சிறுதானிய உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் வயது வரம்பின்றி பலரும் சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த ராகி ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க ராகி பெரிதும் உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]