image

காலை உணவைத் தவிர்க்கும் நபர்களா நீங்கள்? இந்த பாதிப்புகளெல்லாம் கட்டாயம் ஏற்படும்!

காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு உடலின் மெட்டபாலிசம் பாதிப்பதோடு, எடை அதிகரிப்பு, வயிறு உப்பிசம் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Editorial
Updated:- 2025-11-13, 10:17 IST

காலை உணவைத் தவிர்ப்பது பெரும்பாலும் நம்முடைய பசியை அதிகரிப்பதோடு நாளின் பிற்பகுதியில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிக்கூடிய உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

 காலை உணவைத் தவிர்க்கும் போது உடல் சோர்வாவதோடு உடலின் ஆற்றலும் குறைய நேரிடுகிற. இதனால் எந்த வேலைலையும் முறையாக செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக காலை உணவை உட்கொள்ளும் போது உடலின் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெறும். ஒருவேளை காலச்சூழல், நேரமின்மை போன்ற காரணங்களால் காலையில் சாப்பிடுவதைத் தவிர்க்கும் போது உடலின் கலோரிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதோடு ஆற்றலின்மை ஏற்படுகிறது. நேரம் தவறி உட்கொள்ளும் போது உடல் எடையும் அதிகரிக்கிறது.

காலை உணவை எப்போது உட்கொள்ளத் தவிர்க்கும் போது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவை உடலில் அதிகரிக்கும். இதோடு டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பையும் உருவாக்கும். காலையில் வெறும் வயிறோடு இருக்கும் போது அமில ரிஃப்ளக்ஸ், இரைப்பை அழற்சி மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கட்டாயம் கொஞ்சமாவது பிரேக் பாஸ்ட் சாப்பிட வேண்டும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]