நம்மில் பலரும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஸ்னாக்ஸ் சாப்பிடும் எண்ணம் வரும்போது, ஆரோக்கியமான விருப்பமாக பழங்களை தேர்வு செய்கிறோம். இந்த நிலையில் அனைத்து பழங்களும் மாலையில் அல்லது இரவு நேரத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல, குறிப்பாக அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட பழங்களை சாப்பிடக் கூடாது. பழங்கள் பொதுவாகவே ஒரு ஆரோக்கியமான சத்தான தேர்வாக இருந்தாலும், சில பழ வகைகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதனால் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்க செய்யலாம். இந்த வரிசையில் இரவில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பழங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கையான இனிப்பு மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமானது. இருப்பினும், படுக்கைக்கு முன் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட பழங்களை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். இது உங்கள் தூக்க முறைகளை சீர்குலைத்து, அடுத்த நாள் உங்களை தொந்தரவாக உணர வைக்கும். நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
வாழைப்பழங்கள் விரைவான மற்றும் எளிதான ஸ்னாக்ஸ்க்கு பிரபலமான தேர்வாக இருந்தாலும், அவற்றில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. படுக்கைக்கு செல்வதற்கு முன் வாழைப்பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
மாம்பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சுவையான பழமாகும். இருந்தாலும் அவற்றில் சர்க்கரையும் அதிகமாக உள்ளது, இது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பே ஆற்றலை அதிகரிக்க வழிவகுக்கும். உங்கள் தூக்க முறைகளில் இடையூறுகளைத் தடுக்க இரவில் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலும் பழ சாலடுகள் மற்றும் இனிப்புகளில் சேர்க்கப்படும் ஒரு சுவையான பழம் இந்த திராட்சை. இருப்பினும், அவற்றில் அதிக அளவு இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இது படுக்கைக்கு செல்வதற்கு முன் உட்கொண்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். அதற்கு பதிலாக பெர்ரி போன்ற குறைந்த சர்க்கரை கொண்ட பழங்களைத் தேர்வு செய்து இரவில் சாப்பிடலாம்.
அன்னாசிப்பழம் அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக்கு பெயர் பெற்ற ஒரு வெப்ப மண்டல பழம். இது வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரமாக இருந்தாலும், அன்னாசிப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் இரவு நேர ஸ்னாக்ஸ்க்கு சிறந்த தேர்வாக இந்த அன்னாசிப்பழம் இருக்காது. தூக்கக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இரவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எனவே படுக்கைக்கு முன் நீங்கள் உட்கொள்ளும் பழங்கள், குறிப்பாக அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளதா என்று கவனமாக இருப்பது முக்கியம். இரவு நேரங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டெண் கொண்ட பழங்களைத் தேர்ந்தெடுப்பது நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]