herzindagi
image

பற்கள் பளிச்சின்னும்,வலுவாகவும் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது?

பளிச்சிடும் வெண்ணிற பற்களை விரும்பாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. இதற்காக நீங்கள் பல் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
Editorial
Updated:- 2025-08-24, 20:41 IST

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பற்களைப் பாதுகாப்பது என்பது அனைவரின் அன்றாட பணிகளில் முக்கியமானது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி மற்றவர்களை சிரிப்பால் கவரக்கூடிய பற்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விபரங்கள் இங்கே.

 

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:

  • குழந்தைகளுக்கு எப்போது பற்கள் முளைக்க ஆரம்பிக்கிறதோ? அன்றைய நாள் முதல் அவர்களுக்கு பல் துலக்குவதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருமே காலை மற்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக தினமும் பல் துலக்க வேண்டும்.

மேலும் படிக்க: இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்

  • உப்பு மற்றும் கரித்தூள் கலந்து செய்யப்படும் பற்பொடிகளை வீட்டிலேயே தயாரித்து பற்களைத் தினமும் துலக்க வேண்டும்.
  • வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் கட்டாயம் வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சிகளை வைத்து பல் துலக்க வேண்டும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பதால், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்களை எப்போதும் வலுவாக வைத்திருக்க உதவும்.

  • திரிபாலா மற்றும் அதிமதுரம் கலந்து இயற்கையான மவுத் வாஷ் தயாரித்துக் கொள்ளவும். தினமும் பல் துலக்கிய பின்னதாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மவுத் வாஷைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இது பற்களில் உள்ள கிருமிகளை அகற்றி வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.
  • பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை அகற்றுவதற்கு வாரத்திற்கு ஒருமுறையாவது ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் ஊற்றி கொப்பளித்து வெளியில் துப்ப வேண்டும். 
  • பல் துலக்கிய பின்னதாக நாக்கை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக உள்ள பிரத்யேக கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க: தோல் நோய் முதல் இதய பிரச்சனைகள் வரை பல நோய்களை குணப்படுத்த உதவும் நட்சத்திர பழம்

பற்களைப் பாதுகாக்கும் வாழ்வியல் முறைகள்:

  • மேற்கூறிய முறைகளில் பற்களைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும், அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
  • சாப்பிடக்கூடிய உணவுகள் பற்களில் சிக்கி இருப்பதால் பாக்டீரியாக்கள் உருவாகும். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
  • குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் சரி பற்களைப் பாதுகாக்க இனிப்பு பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாக்லேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

 Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]