herzindagi
image

டூத் பிரெஷ்களை மாற்றும் பழக்கம் இல்லையா? அப்ப பிரச்சனைகளெல்லாம் கட்டாயம் ஏற்படும்!

பற்களை சுத்தமாக வைத்திருக்கத் தினமும் பிரெஷ்களைப் பயன்படுத்தி பல் துலக்கினால் மட்டும் போதாது. குறிப்பிட்ட மாதத்திற்குள் புதிய பிரெஷ்களைப் பயன்படுத்தவில்லையென்றால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
Editorial
Updated:- 2025-09-03, 23:04 IST

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என நம்முடைய முன்னோர்கள் ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி பற்களை சுத்தமாக வைத்திருந்தார். இதனால் தான் என்னவோ? பல் மருத்துவமனைக்கு யாரும் சென்றதே இல்லை. 60 வயதானாலும் பலருக்கு பற்கள் மிகவும் வலுவுடன் இருந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.

பற்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட டூத் பேஸ்ட் அதாவது பற்பசைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறினாலும் சில நேரங்களில் அதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும். அது எப்படி என சந்தேகம் ஏற்படுகிறதா? ஆம் டூத் பேஸ்டுகளை மட்டும் மாற்றினால் போதாது. பற்களை சுத்தமாக்கப் பயன்படுத்தப்படும் டூத் பிரெஷ்களையும் அவ்வப்போது மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்றம் வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

 

டூத் பிரெஷ்களைப் பயன்படுத்தும் முறைகள்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்படும் பிரெஷ்கள் சரியாக உள்ளதா? என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதன் பின்னதாக
பல்துலக்கும் பிரெஷ்களை ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒருவேளை 3 மாதங்களுக்கு மேலாக பிரெஷ்களுக்கு உபயோகிக்கும் போது உடல் நல பாதிப்புகள் ஏற்படும். பற்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பிரெஷ்களை மாற்றவில்லையென்றால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுப் பாதிப்புகள் ஏற்படும்.

ஒருவேளை உங்களுக்கு காய்ச்சல், சளி மற்றும் வைரஸ் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் மூன்று மாதங்கள் ஆகவில்லையென்றாலும் டூத் பிரெஷ்களை மாற்றுவது அவசியம். இதே போன்று தொடர்ச்சியாக வாயில் அலர்ஜி மற்றும் எரிச்சல் ஏற்படும் பட்சத்தில், டூத் பிரெஷ்களை மாற்றுவது அவசியம்.

பிரெஷ்களில் உள்ள முட்கள் தேய்ந்துவிட்டால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். அது பற்களில் குத்தி குத்தி வாயில் புண்களை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு பெரியவர்கள் கட்டாயம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரெஷ்களை மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: Fatty liver: கல்லீரல் பாதிப்புக்கு இதுதான் முக்கிய காரணம்: நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ

குழந்தைகளுக்கு எப்போது டூத் பிரெஷ்கள் மாற்ற வேண்டும்?

குழந்தைகளுக்காக உள்ள பிரத்யேக டூத் பிரெஷ்கள் உள்ள நரம்புகள் ( முட்கள்) சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். பெரியவர்களை விட அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். கட்டாயம் பெற்றோர்கள் குழந்தைகளின் பிரெஷ்கள் என்ன நிலைமையில் உள்ளது? என அடிக்கடி கண்காணித்துக் கொள்வது நல்லது.

Image credit - Freepik

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]