குளிர்காலம் தொடங்கியாச்சு. இந்த பருவநிலையை இதமாக்க ஒவ்வொருவரும் தூங்கும் போது பெட்ஷூட்டுகளை அதிகளவில் உபயோகிப்போம். இல்லையென்றால் சளி, இருமல், போன்ற உடல் நல பாதிப்புகளைக் கட்டாயம் சந்திக்க நேரிடும். அதிக குளிரின் காரணமாக பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பது இயல்பு தான். இதைத் தவிர்க்க போர்வைகளைப் போர்த்தி தூங்கினால் மட்டும் போதாது. உபயோகிக்கும் போர்வையை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பல உடல் நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அவை என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
நாம் தூங்குவதற்குப் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். விரித்துப் படுக்கும் படுக்கை என்பது நமது உடலுடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறது. உடலில் உள்ள திரவங்களை உறிஞ்சும் தன்மையைக் கொண்டது. துவைக்காமல் போர்வைகளை உபயோகிக்கும் போது, அவற்றில் இருக்கும் பல விதமான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் இனப்பெருக்கத்தை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்க வழிவகுக்கிறது.
மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
எனவே இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் விரித்துப் படுக்கும் போர்வைகளைக் கட்டாயம் வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]