herzindagi
image

வெங்காயம் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? இந்த பாதிப்புகளெல்லாம் நிச்சயம்

வெங்காயம் சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.  
Editorial
Updated:- 2025-08-30, 20:32 IST

சைவ மற்றும் அசைவ உணவுகளின் சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் கட்டாயம் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றிற்கு இணங்க குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெங்காயத்தை உட்கொண்டால் தீங்கு தான். அவை என்னென்ன? என்பது குறித்த முழு விபரம் இங்கே.

மேலும் படிக்க: இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்

வெங்காயமும் அதன் பக்கவிளைவுகளும்:

செரிமானத்திற்குத் தீர்வு:

வெங்காயத்தில் ஒரு வகையான கார்போஹைட்ரேட்டின் பிரக்டான்கள் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. எனவே பச்சை வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதோடு வயிற்று வலி, வயிற்று எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் கவனமாக உட்கொள்ள வேண்டும்.

வாய் துர்நாற்றம்:

வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்பவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வாய் துர்நாற்றம். இதை சாப்பிட்ட பின்னதாக மற்றவர்களின் பேசும் போது சங்கடமான சூழலை அனுபவிப்போம். வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவையால் தான் சாப்பிட்ட பல மணி நேரத்திற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது. பல் துலக்குதல் மற்றும் மவுத்வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்திய பின்னதாக தான் இதன் வாசனை படிப்படியாக குறையக்கூடும்.

மேலும் படிக்க: நார்ச்சத்து முதல் வைட்டமின்கள் வரை; கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 வகையான காய்கறிகள்

ஒவ்வாமை பிரச்சனை:

வெங்காயம் சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு, இரத்த சர்க்கரை அளவு சீராதல் போன்ற பல்வேறு நன்மைகளை நாம் பெற முடியும். இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஒருவேளை உங்களுக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

நெஞ்செரிச்சல்:

வெங்காயத்தில் உள்ள சேர்மங்கள் உணவுக்குழாயின் சுழற்சியைத் தளர்த்துவதோடு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அதே நேரத்தில் நார்ச்சத்துள்ள வெங்காயம் பற்களுக்கு இடையில் உள்ள பிளேக் உருவாவதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க: மலச்சிக்கல் முதல் செரிமான பிரச்சனை வரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிவி பழத்தின் நன்மைகள்

இதுபோன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உங்களது உணவு முறையில் அளவுக்கு அதிகமாக வெங்காயத்தை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100 கிராம் அளவுக்கு வெங்காயத்தை உட்கொண்டால் போதும். எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]