சரியான உடற்பயிற்சி எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருப்பது போல் சில பானங்களும் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். தொப்பை காரணமாக மற்றவர்களுடன் அசௌகரியமாக உணர்ந்தால் இந்த பானங்கள் பயனுள்ளதாக இருக்கும். இரவில் தூங்கும் முன் அவற்றை எடுத்துக் கொண்டு, ஸ்லிம், டிரிம் மற்றும் ஃபிட்டாக இருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மழைக்கால மூட்டு வலியை குறைக்க 7 சூப்பர் உணவுகள்!!
மூலிகை தேநீரில் இது மிகவும் பிரபலமானது. கெமோமில் என்பது ஒரு வகை பூவிலிருந்து பெறப்படும் மூலிகையாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளில் ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கலாம். கெமோமில் டீயை தினமும் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள் மேலும் மிக விரைவாக உடல் எடையும் குறையும்.
வெந்தய டீயை உட்கொள்வதன் மூலமும் உடல் நச்சுத்தன்மையை நீக்கும். இதற்கு 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெந்தயம் நன்றாக ஊறியதும் தண்ணீரைப் பிரித்து வடிகட்டி கொதிக்க வைத்து தூங்கும் முன் குடிக்கவும். வெந்தய டீ நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவும். வெந்தய தேநீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரிக்கும்.
படுக்கை நேரத்தில் கற்றாழை சாறு குடிப்பதால் இயற்கையாகவே கூடுதல் கொழுப்பைக் குறைக்கலாம். ஆயுர்வேதத்தின் படி கற்றாழை பல நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டது மற்றும் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறியின் போது இது பயனுள்ளதாக இருக்கும், மேலும் செரிமானப் பாதையிலிருந்து ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவுகிறது. இந்த ஜூஸை இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
மஞ்சள் பால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆற்றவும் மஞ்சள் உதவும். இதன் விளைவாக அதிக எடை குறைக்க முடியும். இந்த ஆக்ஸிஜனேற்ற பண்பு நம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றி நல்ல தூங்கச்செய்வதோடு செரிமானத்தை சீராக இயங்க வைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: சானிட்டரி பேட்களை அப்புறப்படுத்த சரியான வழிகள்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பானங்களும் எடையைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் அது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]