சானிட்டரி பேட்கள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் அடிக்கடி பயன்படுத்தப்படும் துணிகளுடன் ஒப்பிடும்போது அவை மாதவிடாய்க்கு மிகவும் வசதியானவை மற்றும் செலவு குறைந்தவை. சானிட்டரி பேட்கள், நாப்கின்கள், துணிப் பட்டைகள், மாதவிடாய் கோப்பைகள் எனப் பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் உள்ளன.
ஆரோக்கியமான மாதவிடாய் பற்றி பேசுகிறீர்கள் என்றால், பீரியட் பேட்களை முறையாக அப்புறப்படுத்துவதும் முக்கியம். திறந்தவெளியில் சானிட்டரி பேட் எங்காவது தென்பட்டால் சுகாதாரக் கோளாறுகள் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: மார்பில் உள்ள முடியை அகற்ற சிம்பிள் வீட்டு வைத்தியம்!!
சானிட்டரி பேட்களை எரிப்பது சிறந்த அப்புறப்படுத்தும் முறை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த முறை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதல்ல. சானிட்டரி பேட்களில் ஏராளமான நச்சு பிளாஸ்டிக் உள்ளதால் எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கும் புகைகளை வெளியிடுகின்றன. நீங்கள் துணி பட்டைகளை பயன்படுத்தினால் அவற்றை எரிக்கலாம், ஆனால் பிளாஸ்டிக் பேட்களை எரிப்பது நல்லது கிடையாது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளை அடிக்கடி கழுவ வேண்டும். அவற்றை சாதாரண சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவிய பின் அவற்றை ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்வது நல்லது. அத்தகைய சூழ்நிலையில் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்கப்படும். ஆனால் சில மாதவிடாய் கோப்பைகளை மிகவும் சூடான நீரில் சுத்தம் செய்ய முடியாது. அதுபோன்றா தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் இருக்கும் விளக்க அட்டையில் கொடுக்கபட்டு இருக்கும் சுத்தம் செய்யும் நுட்பத்தைப் படியுங்கள். தொற்றுநோயைத் தவிர்க்க மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளை சரியாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் காலையில் இந்த 3 காரியங்களை செய்தால் 45 வயது வரை கூட முதுமை வராது
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]