மூட்டு வலிகள் மூட்டுகளில் அழற்சியின் காரணமாக ஏற்படும் பிரச்சனையாகும். இதன் காரணமாக மூட்டுகளில் வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் விறைப்பு போன்ற பிரச்சினைகள் வருகிறது. மழைக்காலத்தில் மூட்டு வலி பிரச்சனை அதிகமாகும். 100 க்கும் மேற்பட்ட வகையான மூட்டுவலி இருந்தாலும், மிகவும் பொதுவானது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம். மூட்டுவலி பிரச்சனை எந்த வயதிலும் வரலாம். ஆனால், உடல் பருமன் மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கீல்வாதத்தின் வகையைப் பொறுத்து வெவ்வேறு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. கீல்வாதத்தின் வலி மற்றும் வீக்கத்தை சரியான மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் குறைக்கலாம்.
நீங்கள் கீல்வாதத்தின் வலியைக் கையாளுகிறீர்கள் என்றால், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உதவும். நோயை எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய அத்தகைய உணவுகள் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம். இந்தியாவின் முன்னணி விளையாட்டு ஊட்டச்சத்து பிராண்டான ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷனின் நிறுவனர் அமன் பூரி இவற்றைப் பற்றி கூறுகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: மார்பில் உள்ள முடியை அகற்ற சிம்பிள் வீட்டு வைத்தியம்!!
கொழுப்பு நிறைந்த மீனில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் உடலில் வீக்கம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன, இதில் EPA (eicosapentaenoic acid) மற்றும் DHA (docosahexaenoic acid) ஆகியவை அடங்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். ஆளிவிதை எண்ணெய் மற்றும் வால்நட் எண்ணெய் ஆகியவற்றிலும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
கொட்டைகள் மற்றும் விதைகள் ஆல்பா லினோலெனிக் அமிலத்தின் (ALA) நல்ல மூலமாகும். இது ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
க்ரீன் டீயில் உள்ள அதிக அளவு பாலிபினால்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன. கீல்வாதத்தில் ஈடுபடும் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தியைத் தடுக்கும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) ஆகியவையும் இதில் உள்ளன. கிரீன் டீ சாறு கீல்வாதத்தின் வலியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் செல்களை ஃப்ரீ-ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இதில் உள்ள வைட்டமின்-சி மூட்டுகளுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின்-கே அவசியம் மற்றும் வைட்டமின்-ஈ உடலை அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகளிலிருந்து பாதுகாக்கிறது.
மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு பூண்டு மற்றும் இஞ்சி இரண்டும் அவசியம். அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளால் கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.
ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் கிரான்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சக்தியாக உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
பால், பனீர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளதால் மூட்டுவலியின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடும் போது எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது. எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
வலியைத் தவிர்க்க இந்த விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், சிவப்பு இறைச்சி, ஆல்கஹால், வறுத்த மற்றும் காரமான உணவுகள் போன்ற சில விஷயங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த விஷயங்கள் கீல்வாதத்தின் வலியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை உங்கள் எடையையும் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: செரிமானம் முதல் தூக்கம் வரை நன்மை பயக்கும் வாழைப்பழ தேநீர்!!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]