வெளியில் சொல்ல அசிங்கப்படும் வாயு பிரச்சனையை தீர்க்க உதவும் உணவு வகைகள்

பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் முக்கிய பிரச்சனையாக வாயு தொல்லை இருக்கிறது.  உணவு செரிக்காமல், வயிறு உப்பி வாயுவாக வெளியேறி தொல்லை தருகிறது. இதை சரிசெய்யும் உணவு வகைகளை பார்க்கலாம். 
image

இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் காரணங்களால் வயிறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த வாயு பிரச்சனையைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்படலாம், இன்னும் சிலருக்கு அமில தன்மை ஏற்பட்டு வாய் வழியாக எதுக்களித்து தொண்டை பகுதியில் புண்கள் ஏற்படலாம். இந்த வாயு பிரச்சனையை அப்படியே விடுவது உடலுக்குப் பல பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. அஜீரணத்தால் ஏற்படும் வாய்வு பிரச்சனையைப் போக்க மெடிக்கலில் வாங்கும் மாத்திரைகள் அல்லது வீட்டு வைத்தியங்களை முயற்சித்தாலும் தற்காலிகமாக குணப்படுத்தும், அவை நிரந்தர தீர்வாக இருக்காது. வாயு தொல்லை, அஜீரண பிரச்சனையை முழுமையாகக் குணப்படுத்த உணவு முறைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

வாயு தொல்லை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

  • அடிக்கடி வாயு பிரச்சனைகள் ஏற்பட்டால் அல்லது உணவு செரிக்க சிரமப்பட்டால் முதலில் கிழங்கு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கிழங்கு வகைகள் பொதுவாக ஜீரணிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும், வாயுவை அதிகமாக உண்டாக்கும். ஆகையால் உங்களுக்கு வாயுத்தொல்லை இருந்தால் கிழங்கு வகைகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பருப்பு வகைகள் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக ஜீரண சத்திக்கு பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்ப்பது நல்லது. முடிந்த வரை பருப்பு வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • சிலருக்குப் பால் பொருட்களை சாப்பிட்டால் ஜீரணிக்காது, அடிக்கடி வாயு தொல்லையால் அவதிப்படுவார்கள். பால் குடிக்க விருப்பப்படும் நபர்கள் இஞ்சி பால் குடிக்கலாம். இஞ்சி ஜீரணத்தைத் தூண்டக்கூடிய சத்தி இருக்கிறது.

Untitled design (8)

Image Credit: Freepik

வாயு தொல்லை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • காலையில் இட்லி, இடியாப்பம், மற்றும் புட்டு போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ளலாம். பரோட்டா மற்றும் பூரி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். பழத்துண்டுகள் கலந்த கலவைகளை எடுத்துக்கொள்ளலாம், இது ஜீரணிக்க எளிதாக இருக்கும். வீட்டில் செய்யப்படும் சத்து மாவு கஞ்சிகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது வாயு மட்டுமல்ல உடலுக்கும் ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, இஞ்சி சீரகம் சேர்ந்த உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
  • பொதுவாக கிழங்கு வகைகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களைப் போக்கி ஜீரணத்தை அளிதாக்கிறது. எனவே வாரம் ஒருமுறையாவது சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது சிறந்தது.
  • மதிய உணவி சாப்பிட்ட பிறகு தயிர் அல்லது கொத்திக்க வைத்த சீரக தண்ணீர் குடிப்பது நல்லது. இரவு வேலையிலும் காலையில் எடுத்துக்கொள்வது போல் இலகுவான உணவை சேர்த்துக்கொள்ளலாம்.
  • இந்த வாயு பிரச்சனை இருப்பவர்கள் முதலில் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை தெரிந்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது. உடல் சார்ந்த வேறு பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
belly button oil

Image Credit: Freepik


மேலும் படிக்க: தீராத மலச்சிக்கலை தீர்க்க, உடல் எடை குறைக்க வெந்தய விதை செய்யும் நன்மைகள்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP