இரத்தம் உறையாமை நோய் ஏன் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?

ஹீமோபிலியா எனும் இரத்தம் உறையாமை நோய் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் அறிகுறிகளை இப்பதிவில் படித்தறியலாம்…

hemophilia day

ஹீமோபிலியா என்பது ஒரு அறிய வகை நோயாகும். இரத்தத்தில் போதுமான அளவு இரத்த உறைவு புரதங்கள் இல்லாத நிலையில் ஹீமோபிலியா ஏற்படுகிறது. இதனால் இயல்பை விட நீண்ட நேரத்திற்கு இரத்தப்போக்கு ஏற்படலாம். காயங்கள் சிறியதாக இருந்தால் அவை ஆபத்தானவை அல்ல. இருப்பினும் முழங்கால்கள், கணுக்கால் மற்றும் முழங்கைகளில் கடுமையான காயம் ஏற்பட்டால் நிலை மோசமாகலாம்.

உட்புற இரத்தப்போக்கு உங்கள் உறுப்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும். இவை உயிருக்கும் ஆபத்தையும் விளைவிக்கலாம். இந்த மரபணு கோளாறை சரி செய்வதற்காக சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இரத்தம் உறையாமல் போவதற்கான காரணங்கள் மற்றும் ஹீமோபிலியாவின் அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீமோபிலியா நோயின் அறிகுறிகள்

hemophilia symptoms

இரத்த உறைதல் காரணிகளின் அளவைப் பொருத்து ஹீமோபிலியாவின் அறிகுறிகளும் மாறுபடும். குறைவான அபாயம் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது அதிர்ச்சியினால் இரத்தப்போக்கு ஏற்படலாம். ஆனால் கடுமையான குறைபாடு உள்ளவர்களுக்கு எந்த காரணமும் இல்லாமலும் இரத்தப்போக்கு ஏற்படலாம். இதன் அறிகுறிகள் பின்வருமாறு…

  • காயங்கள், அறுவை சிகிச்சை அல்லது பற்களுக்கான சிகிச்சைக்கு பிறகு அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவது.
  • பல பெரிய அல்லது ஆழமான காயங்கள்.
  • தடுப்பூசிக்குப் பிறகு அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படுவது.
  • மூட்டுகளில் வலி, வீக்கம் அல்லது இறுக்கத்தை உணர்வது.
  • சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம் வருவது.
  • காரணமின்றி மூக்கில் இரத்தம் கசிவது.

ஹீமோபிலியா நோய் ஏன் ஏற்படுகிறது?

hemophilia causes

பொதுவாக இரத்தப்போக்கு ஏற்படும் போது உடல் இரத்த அணுக்களை ஒன்றிணைத்து, இரத்தக் கசிவை நிறுத்தி, இரத்தத்தை உறைய வைக்கும். இதில் இரத்த உறைதலுக்கு காரணிகளான புரதங்கள் பிளேட்லெட்டுகளுடன் இணைந்து இரத்தத்தை உறைய வைக்கின்றன.

இரத்த உறைதல் காரணிகள் இல்லாத போது அல்லது உறைதல் காரணியின் அளவு குறைவாக இருக்கும்போது ஹீமோபிலியா ஏற்படுகிறது.

இந்த மரபணு கோளாறு பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு இருக்கலாம். ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலம் இரத்த உறைதல் காரணிகளை தாக்கும் போதும் ஹீமோபிலியா ஏற்படும்.

தடுப்பு மருந்துகள்

ஹீமோபிலியா உள்ள குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் பிறக்கும்போதே வைட்டமின் K மற்றும் பிற வழக்கமான தடுப்பூசிகளை போட வேண்டும். ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுகி ஹெபடைடிஸ் A மற்றும் B தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பானங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP