Weight Gain Shakes : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பானங்கள்

நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள பானங்களை முயற்சி செய்து பாருங்கள்…

weight gain shakes at home

உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் சிரமம் தான். உடல் எடையை அதிகரிக்க ஜங்க் உணவுகள், மருந்துகள் போன்ற வழிகளை தேர்வு செய்வது தவறானது. இதனால் உங்கள் இலக்கை அடைந்தாலும், இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையை தடுக்க ஆரோக்கியமான உணவுகள் மூலமாக உடல் எடையை அதிகரிப்பதே சிறந்தது. இதற்கு உதவக்கூடிய மூன்று பானங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இது குறித்த தகவல்களை NMCH மருத்துவமனையின் மருத்துவரான யோகேஷ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம் ஷேக்

banana shake for weight gain

உடல் எடையை அதிகரிப்பதற்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். சுவை நிறைந்த இந்த வாழைப்பழங்களை கொண்டு வீட்டிலேயே சுலபமாக ஷேக் செய்யலாம். நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் இரண்டு வாழைப்பழங்களை கொண்டு தினமும் ஷேக் செய்து குடிக்கலாம். இதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிப்பது நல்லது. கோடை காலத்தில் தினமும் குடிப்பதற்கு ஏற்ற இந்த ஆரோக்கியமான பானத்தை நீங்களும் பருகி பயன்பெறலாம்.

அவகேடோ ஷேக்

உடல் எடையை அதிகரிக்க வாழைப்பழங்களை போலவே அவகேடோவையும் ஷேக் அல்லது ஜூஸ் ஆக போட்டு குடிக்கலாம். இதில் ஒற்றை நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் E மற்றும் K உள்ளன. குறைந்த உடல் எடை உள்ளவர்கள், தங்கள் உடல் எடையை அதிகரிக்க அவகேடோ ஷேக் குடிக்கலாம். இதை 3 மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வர உங்கள் உடல் எடையை எளிதாக அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

பேரிச்சம்பழம் ஷேக்

dates shake for weight gain

உடல் எடை அதிகரிக்க பேரிச்சம்பழம் சிறந்தது. நீங்களும் எடை குறைவாக இருந்தால் இந்த பேரிச்சம்பழம் பானத்தை தாராளமாக முயற்சிக்கலாம். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், வைட்டமின்கள் A, C, E, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம் உங்கள் எடையை அதிகரிக்க உதவும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP