ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!

ஊற வைத்த வேர்க்கடலையை சரியான அளவில் தினமும் சாப்பிட்டு வர பல அதிசய மாற்றங்களை பார்க்கலாம். இதன் ஆரோக்கிய நன்மைகளை படித்தறிந்து பயன்பெறுங்கள்….

soaked peanuts health benefits

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல வைட்டமின்களும் தாதுக்களும் வேர்க்கடலையில் நிறைந்துள்ளன. வேர்க்கடலையில் காணப்படும் பீட்டா சிட்டோஸ்டெரால் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. வேர்க்கடலை இரும்பு சத்து, ஃபோலேட், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். ஊறவைத்து வேர்க்கடலையின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி விவரிக்கிறது இந்த பதிவு.

ஊட்டச்சத்து விவரங்கள்

100 கிராம் வேர்க்கடலையில் உள்ள பின்வரும் ஊட்டச்சத்து தகவல்களை யாவும் USDA அமைப்பால் வழங்கப்பட்டது.

  • கலோரிகள்- 567 கிலோகலோரி
  • மொத்த கார்போஹைட்ரேட் - 16 கிராம்
  • உணவு நார்ச்சத்து - 9 கிராம்
  • சர்க்கரை - 4 கிராம்
  • புரதம் - 26 கிராம்
  • மொத்த கொழுப்பு - 49 கிராம்
  • நிறைவுற்ற கொழுப்பு - 7 கிராம்
  • ஒற்றை நிறைவுற்ற கொழுப்பு - 24 கிராம்
  • கொலஸ்ட்ரால் - 0 மில்லி கிராம்
  • சோடியம் - 18 மில்லி கிராம்
  • பொட்டாசியம் - 705 மில்லி கிராம்
  • வைட்டமின் B1 - 0.9 மில்லி கிராம்
  • வைட்டமின் B2 - 0.2 மில்லி கிராம்
  • நியாசின் - 17.6 மில்லி கிராம்
  • வைட்டமின் B6 - 0.5 மில்லி கிராம்
  • ஃபோலேட் - 350 மில்லி கிராம்
  • கால்சியம் - 134 மில்லி கிராம்
  • இரும்பு - 6.7 மில்லி கிராம்
  • மக்னீசியம் - 245 மில்லி கிராம்
  • பாஸ்பரஸ் - 549 மில்லி கிராம்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

nutrtion in peanuts

வேர்க்கடலையில் உள்ள கார்டியோ பிரோடெக்டிவ் பண்புகள் பல்வேறு இருதய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. மேலும் நீண்ட காலத்திற்கு இதய நோய் ஏற்படாமல் தடுக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

முதுகு வலியை போக்கும்

நீங்கள் முதுகு வலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? இதிலிருந்து விடுபட ஊற ஊற வைத்த வேர்க்கடலையுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து தினமும் சாப்பிடலாம்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்

வேர்க்கடலையில் நிறைந்துள்ள பீட்டா சிட்டோஸ்டெரால் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன. இது கட்டிகளின் வளர்ச்சியையும், குறிப்பாக மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறை வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்தை 58% வரை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் எடையை குறைக்க உதவும்

வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. வேர்க்கடலையை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்கும். இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். ஊற வைத்த வேர்க்கடலையை அளவோடு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உடல் எடையையும் கணிசமாக குறைக்கலாம்.

செரிமானத்தை மேம்படுத்தும்

peanuts soaked benefits

ஊற வைத்த வேர்க்கடலை குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலக்குடல் எரிச்சல் நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றன. உங்கள் செரிமான மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள அதிக அளவு வேர்கடலையை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை, ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிட்டாலே பல அற்புத மாற்றங்களை பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 7 நாட்களுக்கு 7 வகையான ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்

குறிப்பு

ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி எவ்வித உணவு முறை மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் அன்றாட உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP