நாம் நோய்வாய்ப்பட்டால் அல்லது நமது நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் போதெல்லாம், நம் வீட்டு பெரியவர்கள் நம்மை ஏதாவது ஒரு சாறு குடிக்க அறிவுறுத்துகிறார்கள். ஆரோக்கியமான சாறு குடிப்பதன் மூலம், நாம் உடனடியாக சக்தி பெற்று புத்துணர்வு பெறுகிறோம். தினமும் ஒரு வகை சாறை குடித்து வந்தால், அதுவும் பல்வேறு வகையான சாறுகளை குடித்து வந்தால், அது உடலுக்கு அதிக பலன்களை அளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 7 நாட்கள் குடிப்பதன் மூலம் 7 வகையான நன்மைகளைப் பெறக்கூடிய அத்தகைய 7 வகையான சாறுகளை பற்றி இன்று இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு சொல்லப் போகிறோம்.
முதல் நாள்
வாரத்தின் முதல் நாள் தக்காளி சாறு குடிக்கவும். அதனுடன் பசலை கீரை மற்றும் பீட்ரூட் சேர்த்து சாறு செய்யவும். இதை எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலில் உள்ள இரத்தக் குறைபாடு நீங்கும். மேலும் இந்த சாறு பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் பெரும்பாலான பெண்ளுக்கு இரத்தக் குறைபாடு உள்ளது. இந்த சாறை குடித்தால் ரத்தசோகை பிரச்சனை தீரும்.
இதுவும் உதவலாம் :தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்
இரண்டாவது நாள்
இரண்டாவது நாளில் பசலை கீரை சாறு செய்யலாம். இதில், செலரி மற்றும் பார்ஸ்லி தவிர, நீங்கள் விரும்பும் பச்சை காய்கறிகளை இத்துடன் சேர்க்கலாம். இதில் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கும்.
மூன்றாவது நாள்
மூன்றாவது நாளில், நீங்கள் வெள்ளரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி சாறு குடிக்கலாம். வெள்ளரிக்காய் உடலை நீர்ச்சத்துடன் வைத்து கொள்ள செய்கிறது மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த சாறு இதயத்தை பாதிக்கும் எந்த நோய்களும் வராமல் தடுக்கிறது.
நான்காவது நாள்
நான்காவது நாளில், நார்ச்சத்து நிறைந்த புளுபெர்ரி மற்றும் முட்டைக்கோஸ் சாறு குடிக்கவும். இது மூளையை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது. இதுவும் உடலுக்கு அதிக புத்துணர்வை கொடுக்கும். தினமும் 30 மில்லி ப்ளூபெர்ரி சாறு குடிப்பதால் மூளையின் சக்தி அதிகரிக்கும். இது வேலை சம்பந்தப்பட்ட நினைவாற்றல் மேம்படுத்துகிறது என்றும் அதற்கான சான்றுகளையும் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ப்ளூபெர்ரியில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன.
ஐந்தாம் நாள்
வாரத்தின் ஐந்தாம் நாள் கேரட் ஜூஸ் குடிக்கவும். இந்த ஜூஸில் வைட்டமின் A, C, சத்துக்கள், நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இந்த சாறு பார்வையை கூர்மையாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் கேரட் சாறு குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் A இன் நல்ல மூலமாகவும் உள்ளது. கருவின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம் தேவையானது. அதே நேரத்தில் ஃபோலேட் எந்தவொரு பிறப்பு குறைபாடுகளையும் தடுக்கிறது.
ஆறாம் நாள்
ஆறாவது நாளில், பசலை கீரை மற்றும் பச்சை ஆப்பிள் சாறு குடிக்க வேண்டும். இது உடலில் வைட்டமின்கள் பற்றாக்குறையை ஈடுசெய்ய நன்மை பயக்கும். இது உங்கள் எலும்புகளை வலுவாக்கும். ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி டிஆக்ஸிடன்ட்கள் குறைபாடு நீங்கும். இதில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. மேலும், ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இதயத்திற்கு நலம் பயக்கும். இது தவிர, இதயத்திற்கு மிகவும் பயனுள்ள தாதுவான பொட்டாசியமும் இதில் உள்ளது.
ஏழாவது நாள்
ஏழாவது நாள் இஞ்சி-பீட்ரூட் சாறு குடிக்கவும். ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆண்டி பாக்டீரியா பண்புகள் நிறைந்த இந்த சாறு உங்களை மனதளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும். பீட்ரூட் ஜூஸ் குடிப்பது டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கிறது. உண்மையில், பீட்ரூட் சாற்றில் நைட்ரேட்டுகள் இருப்பதால், வயதானவர்களின் மூளையில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு மறதி நோய் வராமல் தடுக்கிறது. இது தவிர, பீட்ரூட் சாறு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
இதுவும் உதவலாம் :சருமத்தை வெள்ளையாக்க உதவும் அற்புத ஜூஸ் எது தெரியுமா?
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation