Fennel for Constipation : மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? மலச்சிக்கல் தீர சோம்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பதிவில் படித்தறியலாம்…

constipation remedy

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சோம்பு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்ல பலன்களைத் தரும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதோடு மட்டுமின்றி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகளும் அதிகமாக காணப்படுகின்றன. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.

பெரும்பாலும் வாய் புத்துணர்ச்சிக்காக சோம்பு பயன்படுத்தப்படுகிறது. உணவுக்கு பிறகு சிறிதளவு சோம்பு சாப்பிடுவது இன்றளவும் சில வீடுகளிலும், உணவகங்களிலும் நடைமுறையில் உள்ளது. இது பெரும்பாலான சைவ மற்றும் அசைவ சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை கூட்டும் இந்த சோம்பில் ஏராளமான மருத்துவ நன்மைகளும் நிறைந்துள்ளன. இதில் தாமிரம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் C, இரும்பு சத்து, செலினியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை சமையலை தாண்டி சோம்பு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும். இது அதிகப்படியான பசி உணர்வை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. சோம்பு தண்ணீர் குடலை சுத்தம் செய்யவும், நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் நல்லது.

சோம்பு தண்ணீர்

fennel water for constipation

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதை விட அதை தண்ணீருடன் சேர்த்து குடிப்பது கூடுதல் நன்மைகளை தரும். வைட்டமின் A, C மற்றும் D இன் சிறந்த ஆதாரமான இந்த சோம்பு தண்ணீரில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது அஜீரணம் உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். உங்கள் செரிமான பாதை சீராக செயல்பட இந்த சோம்பு தண்ணீர் நிச்சயம் உதவும்.

சோம்பு தண்ணீர் அல்லது டீ செய்வது மிகவும் சுலபமானது. இதை செய்வதற்கு, சோம்பை தண்ணீருடன் சேர்த்து ஒருபோதும் கொதிக்க வைக்காதீர்கள். இவ்வாறு செய்வதால் சோம்பின் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். எனவே பின்வரும் குறிப்புகளை பின்பற்றி நீங்களும் சோம்பு தண்ணீரை வீட்டிலேயே செய்யலாம்.

  • ஒரு டீ அல்லது காபி கப்பில் ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு கப் சூடான தண்ணீர் சேர்க்கவும்.
  • இதை மூடி 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும.
  • பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரின் நிறம் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த நீரை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.
  • இதை உணவுக்குப் பிறகு குடிப்பது நல்லது, ஏனெனில் இது அஜீரண பிரச்சனையை போக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்க உதவும.

இந்த பதிவும் உதவலாம்: விலையோ குறைவு நன்மைகளோ ஏராளம்! பொரி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

குறிப்பு

tips to prevent constipation with fennel seeds

இப்பதிவில் பகிரப்பட்டுள்ள குறிப்புகள் மருந்துக்கு மாற்று அல்ல. உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பிறகு இதை பின்பற்றுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP