ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் பாதாம் சாப்பிட சொல்லி வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூறுவார்கள். பாதாம் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பாதாமில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அதன் கிளைசெமிக் சுமை பூஜ்ஜியமாக இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தோலை நீக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு முக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க: பெண்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொக்கிஷமாக இருக்கும் பலாப்பழ நன்மைகள்
நோய்கள் வருவதற்கு முன் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது முக்கியம். பாதாம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக பாதாம் சாப்பிட வேண்டும். இரு வாரத்தில் உடலில் ஏற்படும் மாற்றத்தை அரிய முடியும்.
பாதாமில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. தண்ணீரில் ஊறவைக்கும் பாதமில் நொதி வெளியேறுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பை குறைக்கிறது.
பாதாம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மூளையின் சரியான வளர்ச்சிக்கு தினமும் பாதாம் பருப்பு கொடுக்க வேண்டும். இது மூளை செல்களை சரிசெய்து, IQ அளவை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது.
பாதாம் சாப்பிடுவது இதயத்திற்கும் நல்லது. அவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொழுப்பை ஊக்குவிக்கின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் பாதாமில் இருக்கும் காரணத்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
பாதாமில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளதால் பிறக்காத குழந்தையின் மூளை மற்றும் நரம்பியல் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உலர்ந்த பாதாமை விட ஊறவைத்த பாதாம் ஜீரணிக்க எளிதானது. எனவே கர்ப்பிணிகள் ஊறவைத்த பாதாமை எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும் படிக்க: நம்பமுடியாத பல ஆரோக்கிய நன்மைகள் தரும் ஊட்டச்சத்துக்களை ஒளித்து வைத்திருக்கும் பூசணி விதைகள்
பாதாம் ஒரு நல்ல ஆற்றல் மூலமாக இருக்கிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் பலவீனத்தை நீக்கி உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஊறவைத்த பாதாமை எடுத்துக்கொள்வது சிறந்தது. இவை மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik & Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]