ஒரு மாதத்திற்கு ஆட்டுக்கால் சூப் குடிச்சு பாருங்க; ஆரோக்கியத்தில் அற்புதம் நிகழும்

கால் வலிக்கு ஆட்டுக்கால் சூப் குடித்திட மருத்துவர்கள் அறிவுறுத்துவது ஏன் ? ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகள் என்ன ? ஒரு மாதத்திற்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதன் அவசியம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
image

கால் வலிக்கு மருத்துவரை நாடினால் கண்டிப்பாக ஆட்டுக்கால் சூப் குடிக்க அறிவுறுத்துவார்கள். உணவே மருந்து என செவி வழியாக கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆட்டுக்கால் சூப் குடித்த பிறகு இந்த வாசகத்தை நிச்சயம் நம்புவீர்கள். ஆட்டுக்கால் சூப் தொடர்ந்து குடித்து வந்தால் கண்டிப்பாக கால் வலி தீரும். இது அறிவியல் ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் இதர நன்மைகள் என்ன ? இந்த பதிவில் பார்ப்போம்.

goat bone broth nutrition

ஆட்டுக்கால் சூப் சத்துகள்

ஆட்டுக்கால் எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருக்கின்றன. ஆட்டுக்கால் மஜ்ஜையில் இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் பி12, வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் உண்டு. அதே போல ஆட்டுக்கால் குருத்தெலும்பில் இருந்தும் பல சத்துகள் கிடைக்கின்றன. ஆட்டுக்கால் சூப் வைத்து குடித்தால் மேற்கண்ட சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.

ஆட்டுக்கால் சூப் நன்மைகள்

எலும்பின் உறுதித்தன்மை

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடல் எலும்புகள், மூட்டுகள் வலுப்பெறும். கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்றவை எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானது. எலும்புத் தேய்மானத்தை தடுக்கும் பண்புகளும் ஆட்டுக்கால் சூப்பில் உள்ளன. எலும்புப்புரை நோய் உடையவர்கள் ஆட்டுக்கால் சூப் தவறாமல் குடிக்கவும். ஒரு மாதம் முழுக்க ஆட்டுக்கால் சூப் தொடர்ந்து குடியுங்கள். எலும்புகள் வலுப்பெற்று கால் வலி பறந்து போகும்.

குடல் ஆரோக்கியம்

நம் உடல் ஆரோக்கியத்தை குடல் செயல்பாடு மற்றும் அதன் ஆரோக்கியத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். இந்த ஆட்டுக்கால் சூப் ஜீரண மண்டலத்தில் எளிதில் செரிமானம் ஆக கூடியது. ஆட்டுக்கால் சூப் குடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு சத்துகள் அப்படியே கிடைக்கும்.

ஆட்டுக்கால் சூப் குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம். வயிறு தொடர்பான எந்த ஒரு பிரச்னைக்கும் ஆட்டுக்கால் சூப் சிறந்த தீர்வாகும். ஆட்டுக்கால் குருத்தெலும்பில் உள்ள வேதிப் பொருள் செரிமானத்தை ஊக்குவிக்கும்.

மூளையின் செயல்திறன்

ஆட்டுக்கால் சூப் நம் நரம்பு மண்டலத்தை தளர்த்தும். இதன் காரணமாக நமக்கு நல்ல தூக்கம் வரும். மூளையில் செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் வேகமெடுக்கும். மூளை சுறுசுறுப்படைந்து பணியில் கூடுதல் கவனம் செலுத்த உதவும்.

மேலும் படிங்கசுரைக்காய் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் இன்றி வாழலாம்

எடை குறைப்புக்கு ஆட்டுக்கால் சூப்

ஆட்டுக்கால் சூப் குடித்தால் அவ்வளவு சீக்கிரத்தில் பசியெடுக்காது. இதன் காரணமாக பிற உணவுகளை கம்மியாக சாப்பிடுவோம். குறைவான கலோரிகளை உட்கொள்வதால் உடல் எடை குறையும். உடல் எடையைக் குறைக்க விரதம் கடைபிடித்தால் தண்ணீருடன், ஆட்டுக்கால் சூப் குடித்து பாருங்கள். ஆட்டுக்கால் சூப்பில் மஞ்சள் தூள், மிளகு, பூண்டு சேர்ப்பதால் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

ஆட்டுக்கால் சூப் அதிக நேரம் கொதிக்கவிட்டு தயாரித்தால் அதிலிருந்து ஒட்டுமொத்த சத்துகளும் நமக்கு கிடைக்கும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP