herzindagi
image

சுவையான கிரீமி காளான் சூப் சிம்பிளா இப்படி செய்யுங்க!

வீட்டில் உள்ளவர்களுக்கு மாலை நேரத்தில் ஏதாவது சூடாக செய்துக் கொடுக்க நினைத்தால் இந்த கிரீமி காளான் சூப் நல்ல தேர்வாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-09-01, 16:44 IST

நாள் முழுவதும் அயராது உழைப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே அவ்வப்போது அவர்கள் பருகும் டீ அல்லது காபியாகத் தான் இருக்க வேண்டும். தொடர்ந்து இவற்றைக் குடித்துக் கொண்டே இருந்தால் ஒரிரு நாட்களில் சளிப்பாகி விடுவோம். இனி மாலை நேரத்திலாவது சுவையான கிரீமி காளான் சூப் ட்ரை பண்ணிப்பாருங்கள். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: காரசாரமான மிளகாய் வத்தல் சிக்கன் ப்ரை ரெசிபி டிப்ஸ் இங்கே.

கிரீமி காளான் சூப்:

தேவையான பொருட்கள்: 

காளான் - 200 கிராம்

வெண்ணெய் - சிறிதளவு

பூண்டு -5 பற்கள்

சின்ன வெங்காயம் - 5

மிளகுத்தூள்- சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சோளமாவு - 2 டீஸ்பூன்

கிரீமி காளான் சூப் செய்முறை:

  • உடலுக்கு ஆற்றல் அளிக்கும் காளான் சூப்பை கொஞ்சம் சுவையோடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது கிரீமி காளான் சூப் தயார் செய்யுங்கள். இதற்கு முதலில் மேற்கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் வெண்ணெய்யை உருகிக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் காளானையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஒரு கப் சூப் குடிக்க ஆசையா? இந்த சூப்களை ட்ரை பண்ணுங்க

  • அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு , கொஞ்சமாக வெந்துள்ள காளானை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த காளன் கலவையை வதக்கிக் கொண்டுள்ள காளானுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • 5 நிமிடங்களுக்குப் பிறகு 2 டீஸ்பூன் சோள மாவை கலந்து உடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • காளான் சூப் நன்கு கொதித்து வந்தவுடன், இதனுடன் சிறிதளவு மிளகுத் தூள், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கினால் போதும்.. சுவையான மற்றும் கிரீமியான காளான் சூப் ரெடி.

காளான் சூப்பின் நன்மைகள்:

  • பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ள காளான் சூப்களை வாரத்திற்கு ஒருமுறையாவது பருகும் போது, இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
  • காளானில் குறைந்த கலோரிகள் உள்ளதால், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையைக் கணிசமாக குறைக்க முடியும்.
  • காளான் சூப்பில் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்க்கப்படுவதால் சளி, தொல்லையை நீக்க உதவுகிறது.

மேலும் படிக்க: காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

  • காளானில் ஆன்டிஆக்ஸிடன்டகள், உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளது. இவற்றைத் தொடர்ச்சியாக பருகும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் கொண்ட காளானை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது எலும்புகள் வலிமைப் பெறுகிறது.

Image credit - Freepik

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]