மழை பெய்தாலே, குளிர் அடித்தாலே நமது மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது ஒரு கப் தேநீர் குடிக்கலாம் என்பது தான். குளிருக்கு இதமானதோடு கொஞ்சம் சூடாக உள்ளே போகும் போது உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும். அதிலும் வீட்டு பால்கனியில் அமர்ந்து ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கும் சுகம் இருக்கே? சொல்லவே தேவையில்லை. ஆனால் என்ன அதிகளவில் டீ, காபி குடிப்பதால் பலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் இனி மழை பெய்யும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சூப்களைக் குடிக்க கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். இதோ அந்த சூப்களின் லிஸ்ட் இங்கே.
மழை பெய்யக்கூடிய நேரத்தில் உங்களது வீட்டில் நெல்லிக்காய் இருந்தால் நெல்லிக்காய் சூப் செய்துப் பாருங்க. நெல்லிக்காய், இஞ்சி,சீரகம், மிளகு, கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து சூப் செய்யலாம். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது முதல் உடல் எடையைக் குறைக்கவும் நெல்லிக்காய் சூப் உதவுகிறது.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? டாக்டர் அட்வைஸ்
பச்சைப் பட்டாணியை நன்றாக வேக வைத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து செய்யப்படும் சூப் குளிருக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை சீராக்குகிறது.
சிறுதானியங்களைக் கொண்டு சூப்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பருகும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய பல நோய்க்குத் தீர்வாக அமைகிறது.
மேலும் படிக்க: மலச்சிக்கல் முதல் செரிமான பிரச்சனை வரை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிவி பழத்தின் நன்மைகள்
பொதுவாக வெங்காயத்தை எந்தளவிற்கு உணவு முறையில் சேர்த்துக் கொள்கிறோமோ? அந்தளவிற்கு உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இதோடு கொஞ்சம் புரோட்டீன் நிறைந்த காளானையும் சேர்த்து சூப்பாக செய்யும் போது குளிர்காலத்தில் எவ்வித நோய்த் தொற்றும் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்க உதவும். வெங்காயம், காளான், மிளகு, சீரகம்,கொத்தமல்லி போன்றவற்றை நன்கு கொதிக்க வைத்து சூப்பாக பருகலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல குதிரைப் போன்று ஆற்றல் மிகுந்ததாக இருக்கவும் கொள்ளு நிச்சயம் உதவியாக இருக்கும்.. கொள்ளை நன்றாக வேக வைத்து சூப் செய்யலாம். அல்லது கொள்ளுவை நன்றாக பொடியாக்கி வழக்கம் போல் மிளகு, தக்காளி,வெங்காயம் போன்றவற்றை கொதிக்க வைத்து உடன் கொள்ளு சேர்க்கும் போது சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் ஈஸியாக பெற முடியும்.
இதோடு மட்டுமின்றி பருவ காலத்தில் உடலின் தட்ப வெப்பநிலையை மிகவும் சீராக வைத்திருக்க தக்காளி சூப், கிரீமி ப்ரோக்கோலி சூப், காய்கறி சூப், நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் போன்றவற்றைப் பருக முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உடலை பருவ காலத்திற்கு ஏற்ப ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]