herzindagi
image

சுரைக்காய் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் இன்றி வாழலாம்

சர்க்கரை நோய்க்கு தீர்வு, உடல் எடை குறைப்பு, உடலில் நச்சு நீக்கம், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு சுரைக்காய் ஜூஸ் சிறந்த தேர்வாகும். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-05-04, 19:22 IST

உடல்நலத்தில் அக்கறை கொண்டவரா நீங்கள் ? நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ நினைத்தால் சுரைக்காய் ஜூஸ் குடிக்க ஆரம்பிக்கவும். 100 கிராம் சுரைக்காயில் அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் பி, சி, கே, ஈ மற்றும் ஏ உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான பானமாகும். சில காய்கறிகளை நாம் உணவுமுறையில் தவிர்த்து உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை தவறவிடுகிறோம். சுரைக்காயின் நன்மைகளை தெரிந்தால் இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள்.bottle gaurd juice

சுரைக்காய் ஜூஸ் நன்மைகள்

எடையை குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிகமாக சாப்பிட்டது போன்ற உணர்வே தோன்றாது. சுரைக்காய் ஜூஸின் நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகிறது. உடல் எடையை சீராக நிர்வகிக்க சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும்.

மலச்சிக்கலுக்கு தீர்வு

சுரைக்காய் ஜூஸில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கங்களை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. சுரைக்காய் ஜூஸ் நமது செரிமான அமைப்பிற்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. அஜீரண கோளாறுக்கு சுரைக்காய் ஜூஸ் சிறந்த மருந்தாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடலில் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கவும், மாரடைப்பு, பக்கவாதம் அபாயத்தைக் குறைக்க உதவும்.

சருமத்திற்கு சுரைக்காய் ஜூஸ்

மேற்கண்ட நன்மைகளைத் தவிர சுரைக்காய் ஜூஸ் குடிப்பது பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். இதன் அதிக நீர்ச்சத்து உங்கள் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் சுரைக்காய் ஜூஸின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுருக்கங்கள், முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் பிரச்சினைகளைக் குறைக்க உதவுவதால் தினமும் குடிப்பது நல்லது.

மேலும் படிங்க  நெய்யில் மிளகு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்க; பல விதங்களில் ஆரோக்கியத்திற்கு நல்லது

சர்க்கரை நோய்க்கு தீர்வு

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். சுரைக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) கொண்டுள்ளது. சுரைக்காய் ஜூஸ் குடிப்பது இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்க உதவும்.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சுரைக்காய் ஜூஸ் இயற்கையான மருந்தாகும். இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

தலைமுடி ஆரோக்கியம்

முடி உதிர்தல் மற்றும் பொடுகு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சுரைக்காய் ஜூஸ் ஒரே தீர்வாகும். இதன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. உச்சந்தலையில் சுரைக்காய் ஜூஸ் பயன்படுத்துவது கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]