கர்ப்பம் என்பது எந்தவொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு பொற்காலம். இந்த நேரத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் சந்திக்க நேரிடும்.இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கும் நிறைய உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் சரியான கவனிப்பு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசியம். போதுமான அளவு பெண்களுக்கு சரியான கவனிப்பு மற்றும் சத்தான உணவு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களின் உடலை பாதிக்கிறது. இந்த நாட்களில் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் நிறைய கூறப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவர் நீத்திகா கோஹ்லி, கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதை பற்றி பார்ப்போம்
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பம் தரிக்க திட்டமிடுகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்
உணவு முறைகள்
ஆயுர்வேதத்தின்படி கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பசுவின் நெய், பால் மற்றும் பால் பொருட்களை உங்கள் உணவில் ஒரு அங்கமாக்குங்கள். புதிய காய்கறிகள், பருவகால பழங்கள், பேரீச்சம்பழம் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிடவேண்டும். இந்த நாட்களில் ஆரோக்கியமான உணவு என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அவசியம்.
பிசிகல் ஆக்டிவிட்டீஸ்
கர்ப்ப காலத்தில் பிசிகல் ஆக்டிவிட்டீஸ் மற்றும் ஆதரவாக இருப்பது இரண்டும் முக்கியம். நிச்சயமாக கர்ப்ப காலத்தில் ஒருவர் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்களில் அதிகப்படியான பயணகள் மற்றும் தீவிர கார்டியோ உடற்பயிற்சி தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினமும் நடக்க வேண்டும், லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் தினமும் செய்யக்கூடிய யோகா பயிற்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள், கட்டாயமாக இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் அணுக வேண்டும்.
ஆயுர்வேத மசாஜ்
ஆயுர்வேத மசாஜ் கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேத மசாஜ் ஒரு நிபுணரால் வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யப்பட வேண்டும்.
உணவு அறிந்து உட்கொள்வது
கர்ப்ப காலத்தில் பல சமயங்களில், சில பொருட்களை சாப்பிட்ட பிறகு ஒருவர் நன்றாக உணர்கிறார்கள். மறுபுறம் சில பொருட்களின் வாசனையிலிருந்து விலகிச் செல்வது போல் உணர்கிறார். உங்கள் பசியை (கர்ப்ப ஆசைகள்) புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக சாப்பிட விரும்பக்கூடியவற்றைச் சாப்பிடுங்கள்.
சிறப்பு கவனம்
பெரும்பாலும் சிறுநீர், ஏப்பம், தும்மல் அல்லது கொட்டாவி விடாமல் தடுக்கிறோம். சில நேரங்களில் பொது இடத்தில் இருப்பது, சில சமயங்களில் வேறு சில காரணங்களுக்காக நாம் இவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்போம் ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் இதைச் செய்யவே கூடாது. இது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து ஏன் மிக முக்கியம் தெரியுமா?
உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க herzindagi-யுடன் இணைந்திருங்கள்.
Image credits- freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation