ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாயாக மாறும் அந்த ஒரு தருணம் மிகவும் அழகானது. ஒரு பெண் தாயாக மாறுவதற்கு முன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல நீங்கள் தாயாக வேண்டும் என்று முடிவு செய்த கணம் முதலே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். எடையை பராமரிப்பது முதல் சமச்சீரான உணவை சாப்பிடுவது வரை பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்த தகவல்களை உணவியல் நிபுணரான மனோலி மேத்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இருமல் மற்றும் சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் மூலிகை கஷாயம்
உடல் எடை வரம்பை விட அதிகமாக இருந்தால் கர்ப்ப காலத்தில் சிரமங்கள் உருவாகலாம். ஆகையால் கர்ப்பம் தரிப்பதற்கு முன் உங்கள் எடையை பராமரித்து வரம்புக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். விரைவில் கர்ப்பம் தரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பத்தை திட்டமிடுவதற்கு முன் எடையை குறைக்க வேண்டும். இதற்கு யோகா, டயட் மற்றும் உடற்பயிற்சியின் உதவியை நாடலாம்.
கருத்தரிக்க திட்டமிடுபவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது முற்றிலும் தவிர்ப்பது இன்னும் நல்லது. ஏனெனில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்கலாம். இதனால் கர்ப்பகால சர்க்கரை நோயின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கும். கர்ப்பகால இடையூறுகளை தவிர்த்திட முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உங்கள் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவரின் ஆலோசனையுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இது கருப்பையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தையின் ஆரோக்கியமான நரம்பு குழாய் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியம். இவை வளரும் பொழுது குழந்தையின் மூளை மற்றும் முதும்பெலும்பாக மாறும்.
உங்கள் தினசரி காஃபின் உட்கொள்ளலை குறைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு கப் டீ அல்லது காபிக்கு மேல் குடிப்பதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனெனில் காஃபின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் ஒரு சில வைட்டமின்களை உணவின் மூலமாகவோ அல்லது மாத்திரைகளாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் வைட்டமின் D, கால்சியம் மற்றும் ஃபோலிக் ஆசிட் மிகவும் அத்தியாவசியமானவை. இவை அனைத்தும் பிறவி குறைபாடுகளின் அபாயத்தை குறைக்கின்றன. மேலும் கர்ப்பம் தரிக்க திட்டமிடுவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்து தேவைப்பட்டால் சோதனைகளையும் மேற்கொள்வது நல்லது. மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஓரே மாதத்தில் 6 கிலோ வரை எடை குறைக்க நிபுணரின் டயட் பிளான்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]