Ayurveda life: நோய்கள் இல்ல வாழ்க்கையை வாழ ஆயுர்வேத குறிப்புகள்

ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதத்தில் பல வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புக் குறிப்புகளைப் பின்பற்றினால் நோய்கள் இல்ல வாழ்க்கையை வாழலாம்.

Ayurveda life card

ஆயுர்வேதம் என்பது நம் நாட்டின் பழைய மருத்துவ முறை. நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமின்றி சரியான வாழ்க்கையை வாழவும் கற்றுக்கொடுக்கிறது. ஆயுர்வேதத்தில் இதுபோன்ற பல பழக்கவழக்கங்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றைப் பின்பற்றினால் நோய்களை விட்டு விலகி ஆரோக்கியமாக வாழலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், தூங்குவதற்கும் எழுந்திருப்பதற்கும் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும், ஆரோக்கியமாக இருக்க காலை வழக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி ஆரோக்கியமாக வாழ தினமும் நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டும். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் நீத்திகா கோஹ்லி கூறுவதை பார்க்கலாம்.

ஆரோக்கியமாக வாழ்க்கைக்கான ஆயுர்வேத முறைகள்

  • ஆரோக்கியமாக இருக்க பிரம்மமுஹூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். நம் வீட்டுப் பெரியவர்கள் சூரியன் உதிக்கும் முன் எழுந்திருக்க வேண்டும் என்று சொல்வதை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். அப்படி செய்வது உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காலையில் சூரியன் உதயத்திற்கு முன் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
  • ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். அப்படி செய்வது செரிமானத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும்.

Ayurveda life eat

  • உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் இருந்தால் சாப்பிடுவது நல்லது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும்.
  • ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணிநேரம் அனைத்து கேஜெட்களிலிருந்தும் விலகி இருங்கள். இந்த 1 மணிநேரத்தில், ஃபோனைப் பயன்படுத்தவோ அல்லது வேறு எந்த கேஜெட்டுகளை பயன்படுத்துவதை தவிற்க்க வேண்டும்.
  • ஆயுர்வேதத்தின் படி மூன்று வேலை உணவிற்கும் பிறகு 100 படிகள் நடக்க வேண்டும்.
  • பெரும்பாலும் மக்கள் நாளின் தொடக்கத்தில் டீ அல்லது காபி குடிப்பார்கள். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீரில் நாள் தொடங்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலை நல்ல ஆற்றலுடன் வைத்திருக்கும்.
  • ஆயுர்வேதத்தின் படி சருமத்தில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கும். எனினும் நீங்கள் நிபுணர் ஆலோசனையுடன் எண்ணெய் தேர்வு செய்ய வேண்டும்.

Ayurveda life face

  • ஆயுர்வேதத்தின் படி காலையில் எழுந்து நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். செம்பு அல்லது வெள்ளி U-வடிவ ஸ்கிராப்பரைக் கொண்டு தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் 20 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் போதும்.. இத்தனை பிரச்சனையும் தீருமாம்!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP