herzindagi
image

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க நீங்கள் நாள்தோறும் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க சீரான பராமரிப்பும், நல்ல பழக்கவழக்கங்களும் அவசியம். உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சில எளிய தினசரி பழக்கங்கள் என்னவென்று இதில் காணலாம்.
Editorial
Updated:- 2025-11-12, 11:45 IST

கூந்தல் பராமரிப்பு என்பது மிகவும் கடினமான காரியம் இல்லை. மிக எளிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்து, முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். அவற்றை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் கூந்தல் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவும் சத்தான உணவுகள்

 

உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்:

 

தினமும் 5-10 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலையை மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது. இதனால் கூந்தல் வளர்ச்சி மேம்படும்.

Scalp massage

 

சரியான கூந்தல் பராமரிப்பு:

 

கடுமையான இரசாயனங்கள் இல்லாத (sulfate-free) ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆர்கன் எண்ணெய் போன்ற ஊட்டமளிக்கும் எண்ணெய்களை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள்.

 

கூந்தல் சேதமடைவதை தடுக்கவும்:

 

உறங்கும் போது கூந்தல் உதிர்வதையும், உரசுவதால் ஏற்படும் சேதத்தையும் குறைக்க, தளர்வான கொண்டை போட்டுக் கொள்ளுங்கள். மிருதுவான தலையணைகளை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: Hair growth tips: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் 5 விதமான சத்துகள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே

 

சீரான இடைவெளியில் முடி வெட்ட வேண்டும்:

 

கூந்தலின் நுனியில் ஏற்படும் பிளவுகளை (split ends) நீக்க, சீரான இடைவெளியில் முடியை வெட்ட வேண்டும். இது கூந்தல் மேலும் சேதமடைவதை தடுக்கும்.

Hair cut

 

நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும்:

 

போதுமான அளவு தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். இது, கூந்தல் வறட்சியாவதை தடுக்கும். இதன் மூலம் முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.

 

சத்தான உணவை எடுத்துக்கொள்ளவும்:

 

புரதச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள விதைகள், பருப்புகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.

 

ஸ்டைலிங் செய்வதை தவிர்க்கவும்:

 

ஹேர் ஸ்ட்ரைட்னர்கள் போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். இது அதிகப்படியான முடி உதிர்வுக்கு வழிவகுக்கக் கூடும். இந்த எளிய பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]