"1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்கலாம்" இது போன்ற வாசகங்களை கேட்டு உடல் எடையை குறைப்பதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எடையை குறைக்க சரியான முறையை பின்பற்ற தவறினால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். மேலும் எதிர்காலத்தில், எடை முன்பு இருந்ததை விட மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க சற்று நேரம் தேவைப்படும்.
நிபுணர்களின் கருத்துப்படி பொறுமையுடன், உங்கள் எடை இழப்புக்கான வழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்க முடியும். இவ்வாறு சரியான முறையை பின்பற்றி பொறுமையாக உடல் எடையை குறைக்கும் பொழுது எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. உணவியல் நிபுணரான சிம்ரன் கவுர் அவர்கள் பரிந்துரை செய்துள்ள இந்த குறிப்புகளை 30 நாட்களுக்கு பின்பற்றிய பின், உங்களுடைய உடல் எடையை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எடையில் நிச்சயமாக மாற்றத்தை காண முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பழங்கால வைத்தியம்!
நீங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும்படி நிபுணர் அறிவுறுத்துகிறார். வெளி உணவுகள், ஜங்க் உணவுகள், மைதா சர்க்கரை போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த காய்கறிகள், சப்பாத்தி, பருப்பு மற்றும் சமச்சீரான உணவுகளை சாப்பிடலாம். நீங்கள் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் உங்களுடைய உணவு புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோகியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான உணவாக இருக்க வேண்டும்.
தூக்கம் எடை இழப்பிற்கு அவசியமா? நிச்சயமாக நல்ல தூக்கம் உடல் எடையை குறைக்க உதவும். தூக்கமின்மையால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இது செரிமானத்தையும் பாதிக்கிறது. எனவே தூங்குவதற்கான நேரத்தை தீர்மானித்து அதை 30 நாட்களுக்கு கடைபிடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
எடையை குறைக்க உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். நச்சுக்களை வெளியேற்றினால் எடையை குறைப்பது சுலபமாகும். சோம்பு, வெள்ளரிக்காய், இஞ்சி, பட்டை போன்ற பொருட்களைக் கொண்டு டீடாக்ஸ் தண்ணீர் தயாரித்து அதை நாள் முழுவதும் குடிக்கலாம். டீடாக்ஸ் தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை கவனித்துக் கொள்ளுங்கள்
பழங்களில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களும் நிறைந்துள்ளன. காலை உணவுடன் பருவ கால பழங்களை சாப்பிடலாம் அல்லது மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகவும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான எந்த பழத்தையும் சாப்பிடலாம், ஆனால் தினம் ஒரு பழம் கட்டாயமாக சாப்பிட வேண்டும்.
எடை குறைய இரவு உணவை தாமதிக்காமல் சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்க வேண்டும். இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் செரிமானம் முறையாக நடைபெறாமல் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் இரவு உணவிற்கு பிறகு சிறிது தூரம் நடை பயிற்சியும் செய்யலாம்.
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். கடுமையான பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருப்பினும் யோகா அல்லது எளிமையான பயிற்சிகளை தினமும் செய்யுங்கள். எடையை குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உடல் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.
இந்த பதிவும் உதவலாம்: வெள்ளைப்படுதலை சரிசெய்ய உதவும் எளிய வீட்டு வைத்தியம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]