அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் ஜூலை 4ஆம் தேதி பீனிக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது MMA சண்டை பற்றிய படமாகும். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சூர்யா சேதுபதி தொலைக்காட்சிகளுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அதில் சூர்யா சேதுபதி 120 கிலோ உடல் எடையில் இருந்து 60 கிலோ இழந்து 62 கிலோவில் எடையில் மாறுவதற்கு தெரிவித்த விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சூர்யா சேதுபதி 120 கிலோ டூ 62 கிலோ உடல் எடை
பீனிக்ஸ் படத்தை தொடங்கும் முன்பாக 120 கிலோ உடல் எடையில் இருந்தேன். படத்திற்காக 60 கிலோ இழந்து 62 கிலோ எடைக்கு என்னை மாற்றினர். ஈரான் நாட்டு எம்எம்ஏ வீரர் ஒரு வருடம் எனக்கு பயிற்சியளித்தார். எடை அதிகமாக இருந்த காரணத்தால் சண்டை பயிற்சியுடன் டயட் பின்பற்றவும் அறிவுறுத்தினார். காலையில் எழுந்து ஒரு மணி நேரம் ஓட்டப்பயிற்சி முடித்த பிறகு அவருக்கு புகைப்படம் அனுப்புவேன். காலையில் சாப்பிட்டு முடித்தவுடன் உடற்பயிற்சிக்கு செல்வேன். மாலை நேரத்தில் 3-4 மணி நேரம் எம்எம்ஏ பயிற்சி அளிப்பார்கள்.
சூர்யா சேதுபதியின் டயட் & உடற்பயிற்சி
எனக்கு பயிற்சி அளித்தவர் முதல் ஒரு மணி நேரம் இன்று என்ன செய்யபோகிறோம் என பேசுவார். எந்த நேரம் தூங்க வேண்டும், காலையில் கண் விழிப்பது, அன்றாடம் எனன் செய்ய வேண்டும் என சொல்லுவார். இரவில் 10 மணிக்கு தூங்கி காலையில் 5.30 மணிக்கு விழிக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி முடித்தவுடன் கொடுக்கப்பட்ட டயட் பின்பற்றி உணவு சாப்பிடுவேன். 11 மணி அளவில் ஜிம் சென்று உடற்பயிற்சி முடித்த பிறகு மதிய உணவு வழங்கப்படும். மாலை 4-5 மணி அளவில் எம்எம்ஏ வீரரிடம் பயிற்சிக்கு செல்வேன். இரவு 8-9 மணி வரை பயிற்சி நீடிக்கும். ஒரு வருடத்திற்கு இதுவே என்னுடைய அன்றாட வழக்கமாக இருந்தது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவரே உடல் புத்துணர்வு பெறுவதற்கு வெளியே அழைத்து செல்வார்.
சூட்டிங் ஸ்பாட்டில் சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவேன். எடையை குறைப்பதற்காக எண்ணெய், சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்தேன். சர்க்கரை சாப்பிட்டால் எனக்கு முகத்தில் பரு உண்டாகும். அதற்காகவும் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினேன். உடல் எடை குறைப்பு கஷ்டமாக இருந்தது. எனினும் வீட்டில் அப்பா விஜய் சேதுபதியும், அம்மாவும் சந்தோஷப்பட்டனர் என சூர்யா சேதுபதி கூறினார்.
மேலும் படிங்கநடிகர் மாதவனா இது ? உடற்பயிற்சி இன்றி 21 நாட்களில் தொப்பை குறைப்பு
படத்தின் தலைப்புக்கு ஏற்பவே கதாநாயகன் சூர்யா சேதுபதி ஒரு வருடத்தில் பீனிக்ஸ் பறவை போல் ஏற்றம் கண்டு இருக்கிறார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation