68 கிலோ டூ 58 கிலோ, 10 கிலோ எடையைக் குறைத்த விஜய் பட நாயகி அபிநயா ஸ்ரீ

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் நடித்த அபிநயா ஸ்ரீ தனது 10 கிலோ உடல் எடை இழப்பு, உணவுமுறை பற்றி பகிர்ந்துள்ளார். வெள்ளை சர்க்கரையை தவிர்த்தாலே உடல் எடை தானாக குறையத் தொடங்கும் என அபிநயா ஸ்ரீ கூறியுள்ளார்.
image

பிரண்ட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா ஸ்ரீ. விஜய் மீது ஒரு தலைக் காதல் கொண்ட நபராக படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 13. முதிர்ச்சியான தோற்றத்தால் அப்படத்தில் 20 வயதை கடந்த பெண் போல் காட்சியளிப்பார். 36 வயதாகும் அவர் பிரண்ட்ஸ் படத்தில் பார்த்ததை விட மெருகேறி மிக அழகாக தெரிகிறார். இந்த நிலையில் 68 கிலோவில் இருந்து 58 கிலோவுக்கு அதாவது பத்து கிலோ எடை குறைப்பு பயணத்தை பகிர்ந்துள்ளார்

10 கிலோ எடை குறைத்த நடிகை அபிநயா ஸ்ரீ

நான் 68 கிலோ உடல் எடையில் இருந்து 58 கிலோ எடைக்கு குறைய 6 மாதங்கள் ஆகியது. எடையைக் குறைக்க நினைத்தால் ஒன்றரை மாதத்தில் கூட பத்து கிலோ எடையைக் குறைக்கலாம். அப்படி எடை குறைப்பது ஆரோக்கியமானது அல்ல. எதிர்காலத்தில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குண்டாக இருந்து எடையைக் குறைக்கும் போது உங்கள் சதை தொங்க ஆரம்பிக்கும். எடை குறைய குறைய உடற்பயிற்சி செய்தால் தொங்கும் தசைகள் இறுக்கமாகும். எனது உடல் எடை குறைப்பில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. அவை உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம்.

நடிகை அபிநயா ஸ்ரீயின் உணவுமுறை

மதிய நேரத்தில் சாப்பிட்டு தூங்கினால் எடை அதிகரிக்கும் என நினைக்கிறோம். ஆனால் நான் நன்றாக தூங்கியதால் உடல் எடை குறைந்தது. ஜிம்மில் எனக்கு பயிற்சி அளித்தவரும் போதுமான நேரம் தூங்க அறிவுறுத்தினர். உடற்பயிற்சி செய்வது எடை இழப்பு பயணத்தில் 35 விழுக்காடு மட்டுமே. உடலுக்கும், மூளைக்கும் எவ்வளவு ஓய்வு கொடுக்கிறோம் என்பது முக்கியம்.

காலையில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் கிடையாது. புல்லட் காஃபி அல்லது கற்றாழைச் சாறில் எலுமிச்சை பழம் பிழிந்து குடிப்பேன். கற்றாழைச் சாறு சருமத்திற்கும், எடை குறைப்புக்கும் நல்லது. அதை தொடர்ந்து ஊறவைத்த பாதாம் சாப்பிடுவேன். மதிய உணவை 12 மணிக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிடுவேன். இதில் 100 கிராம் சாதம், சிக்கன், முட்டை மற்றும் காய்கறிகள் இருக்கும்.

வெள்ளை சர்க்கரை தவிர்த்திடுங்க - அபிநயா ஸ்ரீ

எடையைக் குறைக்க விரும்புவோர் முதலில் வெள்ளை சர்க்கரை உணவுமுறையில் இருந்து தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரையை நிறுத்தினால் உடனடி பலன் தெரியும். மாலை 4 மணிக்கு பிளாக் காஃபி குடிப்பேன். இரவில் கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு ஏறாது. எடையைக் குறைக்க நினைத்தால் வெளியில் சாப்பிடக் கூடாது. தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். தவறாமல் 3 லிட்டர் தண்ணீர் குடித்ததால் பத்து கிலோ எடை குறைத்ததாக அபிநயா ஸ்ரீ தெரிவித்தார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP