ஒரு கிலோ எடையைக் குறைக்கவே திக்கு முக்காட வேண்டிய நிலையில் நடிகை ஜோதிகா 45 வயதில் ஒன்பது கிலோ எடையைக் வெறும் மூன்றே மாதங்களில் குறைத்துள்ளார். உடல் எடையைக் குறைப்பதற்கு ஜோதிகா குறிப்பிட்ட எந்த உணவுமுறையையும் பின்பற்றவில்லை மாறாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், குடல் ஆரோக்கியம் பற்றிய புரிதல் மற்றும் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகள் ஜோதிகாவிற்கு உதவியுள்ளன. நடிகை வித்யா பாலனால் ஊக்கம்பெற்று உடல் எடையைக் குறைப்பதற்கு வித்தியாசமான முறையை ஜோதிகா பின்பற்றியுள்ளார்.
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா
உடல் எடை குறைப்பு பற்றி நடிகை ஜோதிகா தனது சமூக வலைதளத்தில் விரிவான தகவலை பதிவிட்டுள்ளார். முன்னதாக விரதம் உட்பட பல்வேறு உணவுமுறைகளை பின்பற்றியும் அதிதீவிர உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறைப்பு முயற்சியில் நீண்ட கால பயன்களை பெற முடியவில்லை என தெரிவிக்கும் ஜோதிகா ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பதில் எப்போதுமே சிரமப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனது உடலை அதிகப்படியான உடற்பயிற்சி செய்ய வைத்தும் தொடர்ச்சியாக டயட் இருந்தும் எதுவும் பயன் அளிக்கவில்லை. தற்போது சரியான திசையில் பயணிப்பதால் வலுவாக உணர்கிறேன். மேலும் தனது ஆரோக்கிய இலக்குகளை அடைந்துவிட்டதாக ஜோதிகா கூறியுள்ளார்.
ஜோதிகாவின் எடை இழப்பு பயணம்
எடை இழப்பு பயணத்தில் தனது செரிமான அமைப்பு எப்படி வெவ்வேறு உணவுகளுக்கு செயல்படுகிறது என்பதை பற்றி புரிந்து கொண்டதாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். கலோரிகளை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சாப்பிடும் உணவின் தரத்தையும் அவை உடல் ஆற்றல்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் புரிந்துள்ளார். நீடித்த ஆரோக்கியத்திற்கு செரிமான அமைப்பை பாதிக்காத உணவுகளை உட்கொண்டுள்ளார். இது உடல் எடை குறைப்போடு நின்று விடாமல் எனது உடலை பற்றி ஆழமாக புரிந்து கொள்வதற்கும் உதவியது. உட்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள் ஆரோக்கியத்திலும், மனநலனிலும் பயனளிக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.
மேலும் படிங்க20 கிலோ எடை குறைப்பு ரகசியத்தை பகிர்ந்த நடிகை குஷ்பு; நடைபயிற்சியின் மேஜிக்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், மோர், தயிர், பழைய சாதம் போன்ற ப்ரோபயாட்டிக் உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி பசியை குறைக்கின்றன. வயிறு உப்புசம் பிரச்னையும் தவிர்க்கப்படுவதால் எடை இழப்பு முயற்சியில் நீண்ட காலத்திற்கு உதவுகிறது. உண்மையான ஆரோக்கியம் என்பது சமநிலையை பொறுத்தது. எடை இழப்பு பயணத்திற்கு உடல் வலு மிக முக்கியம். என்னுடைய வயது இதற்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக தகுந்த பயிற்சிகளை அளித்தாக ஜோதிகா கூறியுள்ளார்.
உடல் எடையைக் குறைக்க விரும்பும் 45வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஜோதிகாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation