முகத்தில் இறந்த செல்களை நீக்க கோதுமை மாவு - பச்சை பால் பேக் தடவுங்க

இறந்த செல்கள் தேக்கத்தால் முகம் பளபளப்பை இழக்கிறது, பொலிவு இழந்து வயதான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. முகத்தில் இறந்த செல்களை நீக்க கோதுமை மாவு - பச்சை பால் பேக் தயாரித்து தடவி பாருங்க. 15 நிமிடத்திலேயே பலன் தெரியும்.
image

நம் முகம் பொலிவு இழந்து காண எண்ணெய், அழுக்கு, இறந்த செல்கள் தேக்கம் காரணமாகும். முகத்தில் இவற்றை அகற்றினால் முகம் பளபளக்கும். கோதுமை மாவு நம் சருமத்திற்கு ரொம்ப நல்லது. தலைக்கு கூட கோதுமை மாவு பயன்படுத்தலாம். கோதுமை மாவு பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும். கோதுமை மாவு - பச்சை பால் பேக் தயாரிக்க எளிதானது மற்றும் பயனுள்ளது. இது சருமம் பளிச்சடவும் உதவும். சின்ன குழந்தைகளின் உடலில் தேய்த்து குளிக்க வைத்து பயன்படுத்தலாம். நம் சருமத்தின் நிறத்தை மெலனின் தீர்மானிக்கிறது. இதை பிக்மென்ட் என சொல்வார்கள். செல்கள் பாதிக்கப்பட்டால் மெலனின் உற்பத்தி பாதிக்கப்படும். இதற்கு நாம் கோதுமை மாவு பயன்படுத்துகிறோம்.

கோதுமை மாவு - பச்சை பால் பேக்

  • கோதுமை மாவு
  • ரோஸ் வாட்டர்
  • பஞ்சு

கோதுமை மாவு பச்சை பால் பேக் பயன்படுத்தும் முன்பாக முகத்தை சுத்தப்படுத்த (cleansing) வேண்டும். பச்சை பால், ரோஸ் வாட்டர் கலந்து முகத்தை சுத்தப்படுத்துவதால் சருமத்தில் ஆழமாக உள்ள அழுக்கு கூட வந்திடும். பச்சை பால் ஐந்து ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஐந்து ஸ்பூன் கலந்து பஞ்சு கொண்டு தொட்டு முகத்தில் தடவுங்கள். ரோஸ் வாட்டர் காரணமாக முகம் குளிர்ச்சி அடையும்.

கோதுமை மாவு - பச்சை பால் பேக் தயாரிப்பு

இப்போது கோதுமை மாவு - பச்சை பால் பேக் தயாரிக்க போகிறோம். இதை முகம், கழுத்து பகுதியில் பயன்படுத்தும் அளவில் எடுத்துக் கொள்ளவும். ஐந்து ஸ்பூன் கோதுமை மாவு, ஐந்து ஸ்பூன் பச்சை பால், இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல் நோக்கி தடவுங்கள். இந்த பேக் முதிர்வான தோற்றத்தை தடுத்து பளபளப்பை மீட்டு தரும். 15 நிமிடங்களுக்கு முகத்தில் அப்படியே இருக்கட்டும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தில் ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே செய்து கை விரல்களால் அழுத்தி மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் இறந்த செல்கள் வெளியேற்றப்படும். வாரத்திற்கு இரண்டு நாள் அதாவது நான்கு நாள் இடைவெளியில் கோதுமை மாவு பச்சை பால் பேக் பயன்படுத்தவும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP